எந்த தொழில் ஆரம்பித்தாலும் லாபம் அமோகமாக இருக்கணுமா? இதோ இந்த சின்ன பரிகாரம் போதும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒவ்வொருவரும் லாபம் அதிகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எந்த பெரு வியாபாரத்தையும் தொடங்குவார்கள். சில நேரங்களில் சிலர் தங்கள் முதலீடுகளில் நஷ்டம் அடைகின்றனர். அந்த குறிப்பிட்ட துறையில் அனுபவம் குறைவாக இருப்பது அல்லது அந்த துறையைப் பற்றிய ஞானம் இல்லாமல் இருப்பது இந்த நஷ்டத்திற்கு காரணமாக இருக்கலாம்.

சில நேரங்களில் இவர்களின் துரதிர்ஷ்டமும் லாபம் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே, உங்கள் வியாபாரத்தில் வெற்றி அடைவதற்கு சில ஜோதிட குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை உங்களுக்கும் உதவலாம்.

வியாபார ரீதியாக எதாவது பயணம் மேற்கொள்ளும்போது அல்லது முக்கிய நபர்களை சந்திக்க செல்லும்போது, வெல்லம் சாப்பிட்டு விட்டு செல்லலாம். இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இனிப்பை சாப்பிடுவது காரிய சித்தியை உண்டாக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொண்டு அதனை சந்தனம், விபூதி போல் உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டு போகலாம்.

உங்கள் இல்லத்தில் கருப்பு பசுவை வைத்து பரமாரிக்கலாம் அல்லது, புதன் கிழமைகளில் பசுவிற்கு புல் அல்லது வேறு உணவுப் பொருட்களை வழங்கலாம். இதனால் உங்கள் பொருளாதாரம் சிறக்கும்.

எப்போதும் ஒரு சிவப்பு நிற கைக்குட்டையை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அல்லது சிறிய அளவிலான சிறப்பு நிறத் துணியை உங்களுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாய்களுக்கு உணவு கொடுக்கலாம். ஆலமரத்தின் வேர்களுக்கு தண்ணீர் ஊற்றலாம். உங்கள் வீட்டில் கிணறு இருந்தால், அதனை மூடி போட்டு மூட வேண்டாம். வெள்ளி பாத்திரங்களில் தண்ணீர் மற்றும் பால் அருந்துங்கள். உங்கள் தாயிடம் ஆசிர்வாதம் பெற்று, அவரால் வழங்கப்பட்ட அரிசி மற்றும் வெள்ளி நாணயத்தை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*