விருச்சிக ராசிக்கு மாறும் பணக்கார குரு… இந்த 4 ராசிக்கும் அடிக்கப்போகுது யோகம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நட்சத்திரம் பார்த்து பேரு வச்சி, வீடு கட்டி, குடிபோகி, வேலை தொடங்கி இப்படி இந்தியர்கள் ஜோதிடத்து மேல மிக்க நம்பிக்கை கொண்டிருக்குறது அறிவியல் பூர்வமாவும் நன்மை செய்யும்னு நிறைய பேரு நம்புறாங்க. ராசிக்கு ஏற்ற மாதிரி கோயில்கள் பரிகாரங்கள் செய்து, தனக்கு வர இருந்த கண்டங்கள காணாம போகச் செய்து, வெற்றியின் உச்சிக்கு சென்ற வர்கள் பலர்,. யோகமும், ராசியில் நல்ல நிலையும் இருந்தால் எப்பேர் பட்டவர்களும் தங்கள் கல்வி, செல்வம் இரண்டிலும் பணக்காரராகிவிடுவார்கள். அறியாமையை போக்கும் கல்வியையும், ஏழ்மையை போக்கும் செல்வத்தையும் ஒருசேர தர வல்ல ராசி நாயகன்தான் குரு. அவர் விருச்சிக ராசிக்கு இடம்பெயர இருக்கிறார். அதனால் கீழ்காணும் நான்கு ராசிக்காரர்களுக்கு செல்வ வளத்துக்கு குறைவில்லாமலும், கல்வியும் பெறுவார்கள். மற்றவர்களும் கவலைப் படத் தேவையில்லை. பரிகார கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தால், குருவின் பார்வை வரும் வருடங்களில் மாறி உங்களையும் சிறப்பாக்கும். வாருங்கள் கோயில்கள் பற்றியும், ராசிகள் பற்றியும், அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் தெளிவாகக் காண்போம்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோயில், பழநி மலையின் உச்சியில் கம்பீரமாக அமைந்துள்ளது. 600 படிக்கட்டுகளில் ஏறி பழநி ஆண்டவரை பலர் தரிசிக்கின்றனர். ரோப் கார் வழியாக பயணிக்கவும் ஏற்பாடுகள் நிறைய உள்ளன. 8 மற்றும் 13வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பாண்டிய மற்றும் சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து பெரிதாகக் கட்டியிருக்கின்றனர். தங்களின் கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த ஆலயத்தின் கோபுரங்களையும் மண்டபங்களையும் அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

புளியரை தட்ணாமூர்த்தி கோயில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். பசுமை கொஞ்சும் பக்த தலமாக திகழ்ந்து வரும் இந்த புளியரை தட்ணாமூர்த்தி கோயிலுக்கு மேஷ ராசிக்காரர்கள் சென்று வர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் உயர்ந்து குடும்பத்தில் திருமண பேச்சு நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். இந்த கோயிலில் சதாசிவ மூர்த்தி, சிவகாமி அம்மையார் கோயிலில் தனி சன்னதியில் குருபகவான் தட்சனாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். புளியமரத்தின் பொந்திலிருந்து வெளிப்பெயர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் இந்த கோயிலுக்கு இப்படி பெயர் வந்தது. தென்காசி, செங்கோட்டையிலிருந்து இந்த ஊருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் வாடகை வண்டிகள், தானிகள் (ஆட்டோக்கள்) மூலமாகவும் இந்த கோயிலை அடையலாம்.

சிறுவாபுரி எனும் ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ்பெற்ற முருகன் கோயில் ஆகும். இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டுள்ளது. இந்த கோயில் பாலசுப்ரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. குருவின் பார்வை இல்லாவிட்டாலும், இந்த கோயிலுக்கு வருகை தரும் ராசிக்காரர்கள் கூடிய விரைவில் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். செல்வம் நிலை பெறும்.

ரிஷப ராசிக்காரர்கள் கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவில்பாளையத்தில் அருள்பாலிக்கும் கால காலேஸ்வரரை தரிசித்து வழிபடவேண்டும். நந்தி பகவானின் அருள்பெற்ற ராசியாக ரிஷபம் உள்ளதால், இவர்களின் வழிபாட்டுக்கு இந்தக் கோவிலே ஏற்றது. பிரதோஷம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை நட்சத்திர தினங்களில் சென்று வழிபடுவது மேலும் பலனூட்டும். ரிஷப ராசியுடையோர் மூலவருக்கு தும்பைப் பூ மாலை அணிவித்து வழிபட செல்வம் கொட்டும். சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் கால சுப்பிரமணியர், கருணாகரவல்லி அம்மன் சன்னதிகள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் இடையே முருகன் வீற்றுள்ளார்

அருள்மிகு கால காலேஸ்வரர் திருக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். கோயம்புத்தூரில் இருந்து அன்னூர் செல்லும் மாநகர பேருந்துகள் மூலமாகவும், சக்தியமங்கலம் செல்லும் பேருந்துகள் மூலமாகவும் எளிதில் கோவில்பாளையத்தை அடையலாம்.

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சோலைமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வர குருபகவான் மூலம் உங்களது வாழ்வில் இன்பங்கள் வந்தேறும். வியாபாரத்திலும், பிற உத்தியோகத்திலும் கூடுதல் இலாபத்தை பெற்று செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியடைவீர். மதுரையில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஊர். வாடகை வண்டிகள் தானிகள் மூலமாகவும் இந்த இடத்தை அடையலாம்.

ஸ்ரீரங்கம், மகாவிஷ்ணுவின் எட்டு முக்கிய திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகக் கொண்டாடப்படும் தனிப்பெருமை வாய்ந்ததாகும். இந்த சுயபிரகடனப்படுத்தப்பட்ட திருத்தலங்களை “ஸ்வயம் வ்யாக்த ஷேத்ராஸ்” என்று இந்து புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஸ்ரீரங்கத்திலுள்ள விஷ்ணு கோயில், இத்திருத்தலங்களுள் முதலாவது மட்டுமல்ல; 108 விஷ்ணு கோயில்களுள் மிக முக்கியமான கோயிலாகவும் கருதப்படுகிறது. இந்த விஷ்ணு கோயில், சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்டமான கோயிலாகும். இக்கோயிலின் அமைப்பு மிக அரிதானதாகும்; இது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளினால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயிலில், ‘பிரகாரங்கள்’ என்றழைக்கப்படும் இணைப்புகள், சுமார் ஏழு உள்ளன. பக்தர்கள் இவ்வத்தனை பிரகாரங்களையும் கட்டாயமாக வலம் வருகின்றனர்.

இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம்-திருவையாறு சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவிலும் சிக்கலில் இருந்து 2 கிமீ தூரத்திலும் இந்தக் கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தளங்களில் இதுவும் ஒன்றாகும். ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு நிறைய பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகிறார்கள்.

மூன்று முகத்துடன் கூடிய சிவ லிங்கம் அமைந்துள்ள திருவாக்கரை எனும் ஊர் திண்டிவனம் அருகே அமைந்துள்ளது. ரத்னத்ரயம் என்று போற்றப்படும், சிவன் பார்வதி பெருமாள் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் காட்சி தரும் தலம் இதுவாகும். முதுமக்கள் தாழிக்காக சிறப்பு பெற்ற இந்த இடம் தமிழர்களின் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்கூறுகிறது. திண்டிவனம் புதுச்சேரி வழித்தடத்தில் மயிலம் தாண்டியதும், தெற்கு நோக்கி பிரியும் சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ளது இந்த திருவக்கரை. இங்கு செல்ல திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ள கோயில் இதுவாகும். பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மையார் வீற்றிருக்கும் கோயில் அரியலூர் அருகே அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித் திருவிழா, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பாக இருக்கும். நந்தியின் மீது படும் ஒளி கருவறையில் இருக்கும் இறைவனின் மீது பிரதிபளிக்கிறது. கோபுர கலசத்தின் நிழல் கீழே விழாது.

கன்னிமாதிசையில் குரு, கேது, சிவன் ஆகியோர் கூடிய கன்னி சிற்பம் உள்ள இந்த கோயிலுக்கு சென்று பகவதி அம்மனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதுடன், விரைவில் திருமணம் நடக்குமாம். இந்த கோயிலுக்கு துர்கா பகவதி அம்மன் கோயில் என்று பெயர். இது கோயம்புத்தூர் மாவட்டம் நவக்கரையில் அமைந்துள்ளது. இங்கு காலை 5.30மணிக்கு திறக்கும் நடை மாலை 6.30 வரை திறந்திருக்கும். இங்கு மகாகணபதி, கயிலைநாதர், புற்று லட்சுமிநாராயணன், காவல்ராயன், ஐயப்பன் முதலிய கடவுளர்களும் இருக்கின்றனர்.

ராமநாதபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள உத்தரகோசமங்கை கோயில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களைக் கொண்டது. 3000 வருடங்கள் பழமையான லிங்கம் இந்த கோயிலில் அமைந்துள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இந்த கோயில் அமைந்துள்ளது. புராணக்கதைகளின் படி, இந்த ஊர் சிவபெருமானின் சொந்த ஊராம். சிதம்பரத்தைப் போல நடராச பெருமாள் சிறப்பு வாய்ந்து காணப்படுகிறார்.

வியாக்ரபுரீஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. இங்குள்ள சூரியன் சிலையின் நிழல் சாயாமல் நேராக சுவரில் விழுவது மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

திருப்பெருந்துரை அல்லது ஆவுடையார்கோயில் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆத்மநாதசுவாமி கோயில். இந்த கோயிலுக்கு வயது கிட்டத்தட்ட 1100 இருக்கும். இங்கு இருக்கும் தேருக்கு ஒரு சிறப்பு உண்டு. 5000 பேர் சேர்ந்து கூடினால் மட்டுமே இந்த தேரை இழுக்கமுடியும். இது கிட்டத்தட்ட திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேருக்கு நிகரானதாக இருக்கிறது. 50 ஆண்டுகளாக இந்த தேர் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உருவ வழிபாடில்லாத தமிழகத்தின் ஒரே கோயில் இதுவாகும். இந்த கோயிலை கட்டியது ஒரு பூதம் எனும் நம்பிக்கை இப்பகுதியில் இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிங்கிரிக் குடி பகுதியில் அமைந்துள்ளது சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில். இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் மூன்று நரசிம்மர்கள் இந்த கோயிலின் ஒரே கருவறையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்கள். பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். ஆகவே, விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரையில் மூன்றாம் பிறையுடன் அருள்பாலிக்கும் சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும்.

அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். விழுப்புரத்தில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடைய பேருந்து வசதிகள் சிறந்த முறையில் உள்ளன. மயிலம் செல்லும் பேருந்துகளும், சேதரப் பட்டு செல்லும் பேருந்துகளும் இக்கோவில் வழியே செல்லும். திருக்கனூர், கொடுக்கூர் செல்லும் பேருந்துகளும் திருவக்கரை செல்லும்.

இந்த கோயிலில் விநாயகரும் ஆஞ்சநேயரும் எதிரெதிர் திசையில் அமர்ந்திருக்கிறார்கள். நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், எதிர் திசை நோக்கி ஆஞ்சநேயரும் உள்ளனர். எந்த செயலை தொடங்கும்போதும் விநாயகரை வணங்கி தொடங்கும் பக்தர்கள், ஆஞ்சநேயரை வணங்கி அந்த செயலை முடிக்கின்றனர். ஆஞ்சநேயர் கைகளில் சங்கு, சக்கரம் உள்ளது சிறப்பு. காலை 7 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 7 மணி வரையில் திறந்திருக்கும். அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்களம் கோவிலூர் சென்னகேசவர் கோயிலுக்கு சென்று வழிபட்டால், குருவின் பார்வை இல்லாமலும், வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் அதிலிருந்து உங்களை சென்னகேசவர் காத்தருள்வார். வேலைப்பளு உங்களுக்கு அதிகரிக்கும். கடன் வாங்கவோ, குடுக்கவோ வேண்டாம். குருபகவானை வணங்குவது சிறந்தது. அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில் குடி கொண்டிருக்கும், முருகப் பெருமான் பக்தர்களை காத்தருள்கிறார். சித்ராபவுர்ணமி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் . சஷ்டி விரதத்தையும், கவுரி விரதத்தையும் ஒன்றாக கடைபிடிப்பது இந்த தலத்தின் சிறப்பாகும். முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர உள்ளதால் சிறு சிறு பயணங்கள் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு 3வது இடத்திற்கு செல்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும், கடன் தொகை வசூலாகும்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச் சந்தூரில் அமர்ந்திருக்கும் நரசிம்மரை வழிபட்டு வருவது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமையும். இந்த தலத்தில் நரசிம்மர் , தன் இரு தேவிமார்களுடன் அமைந்திருக்கிறார். இந்த கோயிலில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த ராசி தனுசுதானாம். ஆயுள் கெட்டிப்படும், திருமணத் தடை விலகி குடும்பத்தில் நல்லது நடக்கும்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அமைந்துள்ள கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் வருடங்கள் செல்வம் நிறைந்தவையாக மாறும். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும். அவ்வப்போது உடல் களைப்பு ஏற்படும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடவும்.

திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் காவிரிக்கரையில் அமைந்துள்ள குணசீலத்தில் அருளும் பெருமாளை வெள்ளி, சனிக்கிழமைகளில் வணங்குவது சிறப்பானதாகும். துளசி மாலை அணிவது, பூசை செய்வது குருவின் பார்வை உங்கள் மீது இல்லையென்றாலும் நலன் பயக்கும். வீரம்,போகம் துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் திருவேங்கடநாத புரம் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்தால் சகல யோகங்களும் இல்லம் வந்து சேரும். புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆலயத்துக்கு சென்று வழிபடவேண்டும். மேலும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி, குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும். அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு.பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும். அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

அறப்பள்ளீஸ்வரர் கோயில் கொல்லிமலை சுற்றுலாவில் முக்கியமான இடம் இது. சிவபெருமானின் தலமான இங்கு அவர் தனது மனைவியுடன் காட்சி தருகிறார். குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறை யில் இருந்து மணல்மேடு எனும் பகுதிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் திருக்குருக்கையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை யோகீஸ்வரரை வழிபட்டு வந்தால் வாழ்வில் துன்பங்கள் விலகி நன்மை வந்து சேரும். அல்லது அருகிலுள்ள அம்மன் கோயில் ஒன்றிற்கு சென்று வாராவாரம் பூசை செய்து வழிபடுதல் சிறந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*