நள்ளிரவு வேளை யாழில் நடந்த பயங்கரம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

thief_jaffna

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பெரும் தொகை பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவக்சேரி, மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகளை திருடிய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

மீசாலை பிரதேசத்தை சேர்ந்த ராசரத்னம் ராஜ்குமார் என்ற நபரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிய நிலையில் வந்த 4 பேர் கொண்ட குழுவினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்களை வாளை காட்டி அச்சுறுத்திய நிலையில், 1,233,500 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்க வந்தவர்கள் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit