
நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் தங்குதடையின்றி அமையும். ஒருவருக்கு திருமணம் நடக்க வியாழ நோக்கம் வரவேண்டும். அக்டோபரில் நிகழ இருக்கும் குரு பெயர்ச்சியினால் எந்த ராசிக்காரர்களுக்கு வியாழ நோக்கம் வருகிறது என்று பார்க்கலாம்.
ஒருவருக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் குருபகவானின் ஆசி தேவை. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் தசா புத்திகளின் அமைப்பை கொண்டு திருமண காலம் அமைகிறது. திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் தசாபுத்தி சரியாக அமையாத பொழுது, அவரின் ராசியிலிருந்து குரு பகவான் 2,5,7,9,11ஆம் இடத்தில் நிற்கும்பொழுது திருமணத்தடை நீங்குகிறது. இதுவே வியாழ நோக்கமாகும்.
தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். அதனால்தான் ‘ குரு பார்க்க கோடி நன்மை’ என்று சொல்கிறார்கள். சக்தியும் பலமும் வாய்ந்தது குருவின் பார்வை. ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நிச்சயமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும்.
வியாழன் உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.இந்த குருபெயர்ச்சியில் யாருக்கு திருமணம் கைகூடி வரும், யாருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இடம் பெயர்கிறார். குரு பலன் எனப்படும் வியாழ நோக்கம் இந்த பெயர்ச்சியினால் மீனம், ரிஷபம், கடகம் ராசிகளுக்குக் கிடைக்கிறது. காரணம் விருச்சிக ராசியில் இருந்து 5வது பார்வையாக மீனம் ராசியையும், 7வது பார்வையாக ரிஷபம் ராசியை பார்க்கிறார். 9வது பார்வையாக கடகம் ராசியை பார்வையிடுகிறார் குருபகவான்.
குருபகவானின் பார்வை விருச்சிக ராசிக்காரர்களின் 5வது வீடான மீனத்தின் மீதும் 7வது வீடான ரிஷபத்தின் மீதும் விழுவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாழ நோக்கம் வந்து விட்டது. திருமணம் நடைபெறும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும். இதே போல மகரம் ராசிக்காரர்களின் 5வது வீடு, 7ஆம் வீட்டின் மீது விழுகிறது. களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு 7வது வீட்டின் மீது குருபகவானின் பார்வை படுவதால் அவர்களுக்கு வியாழ நோக்கம் வந்து விட்டது. துலாம் ராசிக்கு 2வது வீட்டில் குரு பகவான் நிற்கிறார். திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்கலாம். மீனம் ராசிக்காரர்களே… பிள்ளைச் செல்வம் இல்லையே என்ற ஏக்கம் போகப் போகிறது. குருபகவான் உங்களின் ராசியை பார்க்கிறார் கூடவே 5வது வீட்டையும் பார்க்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குவா குவா சத்தம் கேட்கும்.