விருச்சிக ராசிக்காரர்கள் முன் ஜென்மத்தில் கொலை செய்யப்பட்டிருப்பார்களாம்… ஏனைய ராசிகளுக்கு எப்படி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜோதிடத்தின் மூலம் வெறுமனே எதிர்காலத்தை மட்டுமே கணிக்க முடியும் என்று கிடையாது. ஜோதிடத்தின் மூலம் கடந்த காலத்தில் குறிப்பிட்ட நபருடைய வாழ்க்கையையும் கணித்துச் சொல்ல முடியும்.

ஜோதிடக் கலையில் கை தேர்ந்த சிலரால், முன் ஜென்மத்தைக் கூட கணித்துச் சொல்லிவிட முடியும். அப்படி உங்கள் ராசியின் படி போன ஜென்மத்தில் எப்படி இறந்திருப்பீர்கள் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்

உங்களுடைய ராசி மேஷம் என்றால், நீங்கள் நிச்சயம் வீரமும் துணிச்சலும் நிறைந்தவர்களாக இருப்பீர்கள். எவ்வளவு பெரிய ஆள் சவால் விட்டாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று அஞ்சாமல் எதிர் கொள்ளும் ஆற்றல் கொண்டவராக இருந்திருப்பீர்கள். சூரியன் தான் உங்களின் அதிபதி என்பதால், நீங்கள் நெருப்பை போன்று மனோதிடமும் வீரமும் கொண்டிருப்பீர்கள்.

உங்களுக்கு முன் ஜென்ம மரணம் என்பது, உங்களுடைய நண்பர்கள் மூலமாக நீங்கள் கொலை செய்யப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக உங்களுடைய ரகசியங்கள் தெரிந்தவர்களால்… அதனால் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களைத் தவிர மற்ற யாரிடமும் நீங்கள் உங்களுடைய சொந்த, ரகசியங்களையும் பகிர்ந்து கொள்வதை தவிர்த்திடுங்க்ள.

ரிஷபம்

பூமியின் முக்கிய குறியீடு நீங்கள். உங்களுடைய குறிக்கோளில் உறுதியாக நிற்க வேண்டும் என்று எண்ணுபவர் நீங்கள். குறிக்கோள், லட்சியம், பொறுமை, பிறரிடம் அன்பாகவும், எதையும் நடைமுறை சாத்தியக் கூறுகளோடு எதார்த்தத்தை நம்புகிறவர் நீங்கள். ஒரு அன்பாக கூட்டத்துக்கு இடையில் நீங்கள் வாழ்வீர்கள்.

ஏராளமான நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். உங்களிடம் ஏராளமானோர் நேருக்கு நேராக வந்து அன்பை தங்களுடைய காதலை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

உங்களுடைய முன் ஜென்ம மரணம் என்பது நீண்ட ஆயுளுடன் நீங்கள் மகிழ்வாக வாழ்க்கையை வாழ்ந்து நிறைவு செய்த பின்னரே நிகழ்ந்திருக்கும். வயது முதிர்நு்த பின், உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருப்பீர்கள். அதனால் இந்த ஜென்மத்திலும் அவ்வப்போது மருத்துவரிடம் சென்று உங்களுடைய உடல்நிலையை பரிசோதனை செய்து கொண்டு, நீண்ட ஆயுளுடன் வாழுங்கள்.

மிதுனம்

நீங்கள் மிகவும் அன்பானவர் பிறரிடம் உண்மையாக முழு மனதுடன் பாசத்தை வெளிப்படுத்துவீர்கள். எப்போதும் கலகலவென இருக்க ஆசைப்படுபவராக இருப்பீர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவராக இருப்பார்கள். நீங்கள் மக்கள் நாயகனாக, அதாவது பிறர் விரும்பும் ஆளாக இருப்பீர்கள். எங்கு செல்கிறீர்களோ அங்கெல்லாம் நண்பர்களை உருவாக்கிவிடுவீர்கள். நீங்கள் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இறந்திருப்பீர்கள்.

அதாவது மிக உயரமான இடத்திலிருந்து கீழே குதித்து இறந்து போயிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை நீங்களாக தவறியும் விழுந்திருக்கலாம். அல்லது வேறு யாராவது உங்களைப் பிடித்து பின்னாலிருநு்து தள்ளி விட்டிருக்கலாம்.

அதனால் உங்களுக்கு சொல்லப்படுகிற அறிவுரை என்னவென்றால், உயரமான இடங்க்ள, உயரமான கட்டிடங்கள், மலைகள், ஹெய்ண்ட் வீல் போன்றவற்றில் நிதானமாக இருப்பது நல்லது. அதேசமயம் மெதுவாகச் செல்லப் பழகுங்கள். இந்த இடங்களிளெல்லாம் உங்களுடைய வேகத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் எந்த இடத்திலும் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். எப்படிப்பட்டவர்களையும் அனுசரித்து, அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவராக இருப்பார்கள். தண்ணீரைப் போல எல்லா இடத்திலும் மிக எளிதாக அந்த இடததுக்கு ஏற்ப பரவக் கூடியவராக இருப்பார்கள்.

நீங்கள் கடக ராசிக்காரர்களாக இருந்தால், நிச்சயம் உங்களிடம் உணர்வுகள், காதல், உண்மை, படைப்புத் திறன் ஆகியவற்றுக்குப் பஞ்சமே இருக்காது. உங்களுடைய நேர்மையாலும் பிறரின் மீது கொண்டுள்ள அக்கறையாலும் எல்லோராலும் விரும்பப் படுகிற ஆளாக இருப்பீர்கள்.

முன் ஜென்மத்தில் நீங்கள் தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருப்பீர்கள். அதனால், இப்போதும் கூட, நீச்சல் தொட்டி, பெரிய தண்ணீர் தொட்டி ஆகியவற்றைக் குனிந்து உற்றுப் பார்ப்பதைத் தவிர்த்திடுங்கள். கடற்கரை, ஏரிகளில் விளையாடும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக, தண்ணீர் சம்பந்தப்பட்ட இடங்களில் வீட்டுத் தொட்டி முதல் வாட்டர் பார்க், ஏன் கிணறு ஆகியவற்றின் அருகில் செல்லும்போது மிகமிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிம்மம்

சிம்மம் என்பது சிங்கத்தின் குறியீடு. சிம்ம ராசி நெருப்பின் அடையாளம். சிம்ம ராசிக்காரர்கள் மனது முழுக்க தீவிரமான குறிக்கோள்களும் பெரும் ஆசைகளையும் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.

மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் வெற்றிக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள்.

முன் ஜென்மத்தில் பெரும்பாலும் இவர்கள் மற்றவர்களால் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, வேலை, தொழிலில் உடனிருப்பவர்கள் மூலமாகவே நடந்திருக்கும். மனதில் பட்டதை அப்படியே பேசும் குணம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பதால், இவர்களுடைய வார்த்தைகளால் பலருடைய மனங்களும் புண்படும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் அந்த பண்பை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். நிறைய பேச மாட்டார்கள். சின்ன சின்ன விஷயங்களையும் கூட மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருப்பார்கள். நேர்மையும் கடின உழைப்பும் இவர்களுக்கான அடையாளமாக இருக்கும். இவர்கள் அன்புக்காகவும் லட்சியத்துக்காகவும் போராடும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.

முன் ஜென்மத்தில் இவர்கள் பெரும்பாலும் விபத்துக்களில் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் சாலைகளில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களில் வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்து விடுங்கள். வாகனங்கள் ஓட்ட முடியாத மனநிலையில் உள்ளபோது துணைக்கு யாராவது நண்பர்களை அழைத்துச் செல்லுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் சமூக அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள். எப்போதும் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கக்கூடியவர்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். யாரையாவது பாராட்டுவதற்கும் அன்பு செலுத்துவதற்கு யோசிக்கவே மாட்டார்கள். எதையுமே தங்களுடைய வழியிலேயே அணுகுவார்கள். வன்முறைக்கும் அசௌகரியமான சூழலுக்கும் ஒருபோதும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.

முன் ஜென்மத்தில் உடல் நலக் கோளாறினால் இறந்திருப்பார்கள். அதனால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகளை முறையாக செய்து கொள்ள வேண்டும். தங்களைச் சுற்றிலும் எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் மிகவும் நட்புடன் பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். அதேசமயம் அன்பும் பணிவும் இவர்களிடம் மிக அதிகமாகவே இருக்கும். மற்றவர்களுடைய எண்ண ஓட்டத்தை எளிதில் புரிந்து கொண்டு அதற்கேற்ப யாருடைய மனதும் புண்படாமல் நடந்து கொள்வார்கள். விவாதங்களை பெரும்பாலும் தவிர்த்திடுவார்கள். அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

முன் ஜென்மத்தில் இவர்கள் அடையாளம் தெரியாத நபரின் மூலம் கொலையுண்டு இறந்திருக்கக்கூடும். பொதுவாக தெரியாத இடத்துக்கு தனியாகச் செல்வது, இரவு நீண்ட நேரம் வெளியில் சுற்றுவது, கூட்டமாக பயணங்கள் மேற்கொள்வது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தியாக உணர்வு கொண்டவர்களாகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடைய போக்கிலேயே தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்களாக இருப்பார்கள். யாராவது உங்களைக் கட்டுப்படுத்த நினைத்தால், உங்களால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. உங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள போராடுவீர்கள்.

முன் ஜென்மத்தில் நீங்கள் தற்கொலை செய்து இறந்து போயிருப்பீர்கள். அதனால் மன அழுத்தம், பெருங்கோபம் போன்றவற்றை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் பொறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். நல்ல குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையையும் அமைதியையும் விரும்புபவர்களாக இருப்பார்கள். சுய கட்டுப்பாடு மிக்க ஆளாக இருப்பார்கள்.

முன் ஜென்மத்தில் நீங்கள் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பீர்கள் அல்லது கொல்லைக்காரர்களால் தாக்கப்பட்டு இறந்திருப்பீர்கள். சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் பிறக்கும் போதே கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்சம் அமைதியான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதோடு இவர்கள் நடுநிலை ஆனவர்களாகவும் சுறுசுறுப்பான ஆட்களாகவும் இருக்கிறார்கள். எதையுமே ஆழ்ந்து யோசிப்பவர்களாக இருப்பார்கள். அதேபோல் அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

முன் ஜென்மத்தில் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தின் மூலம் இறந்திர்ப்பீர்கள். அதனால் சமைக்கும் போதும், எலக்ட்ரிகல் பொருள்கள் கையாளும்போதும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் மிகவும் நட்பு ரீதியாக மற்றவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். எல்லா வகையாக ஆட்களுடனும் சமாளித்துச் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுயநலம் இல்லாதவர்களாக இருப்பார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பவர்கள். எந்த காரியத்திலும் பின்வாங்க மாட்டீர்கள்.

முன் ஜென்மத்தில் வயது முதிர்ந்த பின்பு, உண்டான கடுமையான சளி மற்றும் காய்ச்சலின் காரணமாக இறந்து போயிருப்பீர்கள். அதனால் உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*