கணவனைப் பிரிந்த பெண் ஏற்படுத்திய கள்ளத்தொடர்பு… அடுத்து காத்திருந்து பேரதிர்ச்சி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sushmitha

இந்தியாவில் திருமணமான இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா சர்கார் (20). இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்ற ஆறு மாதத்திலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த சுஷ்மிதா தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுஷ்மிதா தனது வீட்டில் மண்வெட்டியால் அடிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாக கிடப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சுஷ்மிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதன் முதற்கட்ட விசாரணையில் சமூகவலைதளம் மூலம் சுஷ்மிதாவுக்கு இளைஞர் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இளைஞருக்கு கொலையில் தொடர்புள்ளதாக பொலிசார் அவரை கைது செய்துள்ளனர், மேலும், சுஷ்மிதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையில் சுஷ்மிதா அடிக்கடி போனில் ஒருவருடன் கோபமாக சண்டையிட்டு பேசி வந்ததாக சுஷ்மிதாவின் தந்தை கோபி பொலிசிடம் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit