பாடசாலை மாணவர்களின் அநாகரிக செயற்பாடு… அதிரடியாகக் கைது செய்தது பொலிஸ்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arrest_student

தொடரூந்திற்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் சிலர் றாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

றாகம தொடரூந்து நிலையத்தில் வைத்து அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 தொடக்கம் 20 வயதுகளை உடையவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதன் பொருட்டு, தொடரூந்து பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், வெயாங்கொட மற்றும் றாகம ஆகிய தொடரூந்து நிலையங்களில் அவர்கள் கடந்த தினங்களில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit