அதிகாலை வேளை இலங்கையை உலுக்கிய படுகொலை!

பிறப்பு : - இறப்பு :

மீகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மீகொட திக்ஹெதப்ம ஹெனவத்த விகாரை மாவத்தையை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு  கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் கணவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை பணி ஒன்று நிமித்தம் வௌியே செல்வதாக கூறிவிட்டு தனது மகள் வீட்டை விட்டு வௌியேறியதாக உயிரிழந்த பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

பின்னர் , தனது மகள் கத்தும் சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது அவர் இரத்த வௌ்ளத்தில் உயிரிழந்து கிடந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மீகொட காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit