நேரடி ஒளிபரப்பின்போது பெண் நிருபரின் ஆடை விலகியதால் ஏற்பட்ட விபரீதம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

live_video

சவுதி அரேபியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் பொழுது அவரது ஆடை விலகியதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவில் சமீபத்தில் தான் முகமது பின் சாலமன் இளவரசராக பதவி ஏற்றார். இதன் பின்னர் அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார்.

அந்த வகையில், பல ஆண்டுகளாக சவுதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை அவர் தளர்த்தி வருகிறார்.

சமீபத்தில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்கும் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தார். இது சவுதி பெண்களிடையே வெகுவாக வரவேற்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டு பெண்கள் தாங்கள் காரை இயக்குவது போல் செஃல்பி எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதுத் தொடர்பாக சவுதியின் செய்தி சேனல் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்பு, சிறப்பு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது.

இந்த நிகழ்ச்சியை, பெண் நிருபர் ஷிர்ரீன் அல்-ரிபாய், ரோட்டில் நடந்தவாறே தொகுத்து வழங்கினார். அப்போது காற்று வேகமாக வீசிய நிலையில், அவர் அணிந்திருந்த ஆடை சற்று விளகியது. அதனை அவர் உடனடியாக அதை அவர் சரி செய்துகொண்டார்.

ஆனால், இந்தக் காட்சிகளைப் பார்த்த அந்நாட்டு உயர் அதிகாரிகள், ஷிர்ரீன் அநாகரிகமான உடை அணிந்ததாகக் கூறி, அவரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit