சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் பேர்ண்-தொப்பன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் பலர் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

பாற்குடம், கற்பூரச் சட்டி, காவடி எனப் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பூஜை நிகழ்வில் கலந்துகொண்ட பலதரப்பட்ட மக்கள் எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் ஆசியை பெற்று சென்றனர்.

எம்பெருமான் தேர் ஏறி வீதி வலம் வரும்போது பக்தர்களின் தாகசாந்தியை தணிக்கும் வகையில் மோர், சர்க்கரைத்தண்ணீர், கடலை என்பனவும் அடியார்களால் வழங்கப்பட்டது.

தாயக நினைவுகளை தாங்கும் வண்ணம் மணிக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் என்பன அமைக்கப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும்.

பூஜைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று இவ் வைபவம் இனிதே நிறைவேறியது.

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

IMG_0004 IMG_0034 IMG_0081 IMG_0083 IMG_0118 IMG_0119

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*