யாழில் அசம்பாவிதம்… வீடு ஒன்றில் நுழைந்த கும்பல் அட்டகாசம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jaffna_fight

யாழ் நகரிலுள்ள வீடொன்றினுள் வாள்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் – இராமநாதன் வீதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று உந்துருளிகளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த ஆறு பேரே வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், கணனி மற்றும் கதிரைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit