திருடத்தான் சென்றேன், ஆனால்… கமல் வீட்டுக்குள் புகுந்த திருடனின் வாக்குமூலம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kamal_thief

நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைந்த திருடனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் வீடு உள்ளது. இந்த வீடு, மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகமாகச் செயல்படுகிறது.

இங்கு எப்போதும் பொலிசாரும், தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கமல் வீட்டு சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்த நபர் ஒருவர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார்.

இதை பார்த்த காவலாளிகள் அவரை மடக்கி பிடித்தனர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைய முயன்றவர், சபரிநாதன் என்றும் திட்டக்குடியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

சபரிநாதன் அளித்துள்ள வாக்குமூலத்தில், திருடத் தான் அங்குச் சென்றேன். ஆனால், அது கமல் வீடு என்று எனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit