சாதி மாறிக் கல்யாணம்… காதலுக்கு மரியாதை செய்த தந்தைக்கு நேர்ந்த அவலம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவில் இளைஞர் உயர் சாதி பெண்ணை மணந்ததால் பெண் வீட்டார் இளைஞரின் தந்தையிடம் செய்த மோசமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷஹரை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா. இவரின் மகன் சிவக்குமார் (21), ரசியா (18) என்ற பெண்ணை காதலித்த நிலையில் அவருடன் சில தினங்களுக்கு முன்னர் ஓடி போயுள்ளார்.

இது குறித்து ரசியாவின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் இருவரையும் கண்டுப்பிடித்தனர்.

ஆனால் வாழ்ந்தால் சிவக்குமாருடன் தான் வாழ்வேன் என ரசியா உறுதியாக இருந்ததால் நீதிமன்றம் மூலம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சிவக்குமார் தங்களை விட தாழ்ந்த ஜாதி என்பதால் இத்திருமணத்தை ரசியா குடும்பத்தினரால் ஏற்று கொள்ளமுடியவில்லை.

இதையடுத்து இருவரையும் பிரிக்க அவர்கள் முயன்றுள்ளனர்.

இதையடுத்து, இனியும் சிவக்குமார் ஊரில் இருந்தால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா அவரை ஊரை விட்டு வேறு இடத்துக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் கிருஷ்ணா மீது ஆத்திரத்தில் இருந்த ரசியா குடும்பத்தார் அவரை ஊர் எல்லைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் இருந்த நிலையில் கிருஷ்ணாவை தரையில் அடித்து உட்காரவைத்துள்ளனர்.

பின்னர் அவர் எச்சிலை கீழே துப்ப வைத்து அவரையே அதை நக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து ஊரை விட்டே கிருஷ்ணா தனது குடும்பத்துடன் போக ரசியா குடும்பத்தார் மிரட்டி அடித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கிருஷ்ணாவை மீட்டனர்.

இது தொடர்பாக ரசியா தந்தை உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதுடன் இருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*