மின்னலைக் கண்டு நடுங்கிய மணமகனின் நடவடிக்கையில் மாற்றம்… திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

marriage

பீகார் மாநிலத்தில் மின்னலை கண்டு நடுங்கிய மணமகனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்த காரணத்தால் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணமகள்.

ரேனுவுக்கும், ராம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமண நாள் நெருங்கிய நிலையில், திருமணத்தை நிறுத்தியுள்ளதாக ரேனு பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ரேனு பொலிசில் அளித்துள்ள புகாரில், இரண்டு நாட்களுக்கு முன் வயல்வெளியில் மின்னல் அடித்துள்ளது. அதைப் பார்த்த மணமகன் அதைக்கண்டு நடுங்கியுள்ளார்.

அதிலிருந்து அவரின் நடவடிக்கைகள் எல்லாமே வித்தியாசமாக உள்ளதெனக் கூறி தன்னை மணம் முடிக்க இருந்த ராமை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள இயலாது என கூறியுள்ளார்.

திருமணச் சடங்குகள் பெரும் கொண்டாட்டத்தை நோக்கி ஏற்கெனவே கடந்துவிட்ட நிலையில் அவர் இவ்வாறு நிராகரித்தது அவரது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இளைஞரை திருமணம் செய்துகொள்ள இருந்த மணமகள் அவரின் நடத்தையை சுட்டிக்காட்டி தான் திருமணம் செய்துகொள்ளமுடியாது என எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார்.

இதில் ஏற்பட்ட சலசலப்பில் மணமகனின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் மணமகள் வீட்டார் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் மணமகள் வீட்டார் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit