அனைவரையும் வியக்க வைத்த டோனியின் செயல்… வைரலாகும் புகைப்படம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டோனி ஓடிவந்து ரெய்னாவுக்கு தண்ணீர் கொடுத்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி அயர்லாந்தின் டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அதன் படி தவானுக்கு பதிலாக கேஎல் ராகுல், டோனிக்கு பதில் தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக உமேஷ் யாதவ், அறிமுக வீரராக சித்தார்த் கவுலும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், விராட் கோஹ்லி களமிறங்கினர்.

கடந்த போட்டியில் சொதப்பிய கோஹ்லி இந்த போட்டியிலும் 9 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின் ரெய்னாவுடன் இணைந்த லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க அணி இந்திய அணி 100 ஓட்டங்களை தாண்டியது. அணியின் எண்ணிக்கை 128-ஆம் இருந்த போது லோகேஷ் ராகுல் 70 ஓட்டங்களில் வெளியேற அடுத்து வந்த ரோகித் சர்மா டக் அவுட், சிறப்பாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா 69 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் எடுத்தது.

214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 12.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்கள் எடுத்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் டோனி இல்லாத காரணத்தினால் அவர் வீரர்களுக்கு உதவும் வீரராக இருந்தார்.

அப்போது வீரர்கள் தண்ணீர் கேட்டவுடன், உடனடியாக மைதானத்திற்குள் ஓடி வந்து தண்ணீர் கொடுத்தார். அப்படி அவர் ரெய்னாவுக்கு தண்ணீர் கொடுத்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய அணிக்கு பல கிண்ணங்களை பெற்றுத்தந்துள்ள டோனி, எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் இப்படி செய்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*