பொட்டம்மானின் உளவுப்பிரிவில் இருந்தவர் இப்போது ஸ்ரீலங்கா இராணுவ உளவாளி… வெளியானது அதிர்ச்சி தகவல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முன்நாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இதற்கு நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் நல்ல உதாரணம்

கடந்தவாரம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர இழுவை வண்டியொன்றில் (ஒட்டோ) வைத்து விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான பொருட்களும் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்ட செய்தியும் வந்தது அல்லவா

சுவிஸ்நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதிக்கொள்ள ஆதாரம் இல்லை என ஒரு தீர்ப்பு வந்த பின்னர் புலிகளின் மீள் உருவாக்கம் குறித்த நாடகம் ஒன்றுக்காக நடத்தப்பட்ட நாடகம் இது ஒன்று என்பது தெரிந்தவிடயம்.

ஆனால் இந்த விடயத்தில் சிறிலங்கா புலனாய்வுத்துறை ஆடிய ‘ஓவர்’ ஆட்டமானது அவசரப்பட்டு அவர்களின் தரப்பில் ‘சேம்சைட் கோல்’ ஒன்று அடித்துவிட்டதாகவே தெரிகிறது

இதனை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவின் வலதுகரங்களின் ஒன்றான ரியர் அட்மிரல் சரத்வீரசேகர நேற்று கொழும்பில் தனது ஊடக சந்திப்பில் அம்பலப்படுத்திவிட்டார்.

ஓட்டுசுட்டான்பகுதியில் 20 கிலோ கிளைமோர் குண்டு, கைக்குண்டுகள், ரிமோட்கொண்றோல்கள், ரி-56 ரக துப்பாக்கிரவைகள்;, புலிகளின் சீருடைகள் விடுதலைப் புலிகளின் கொடிகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா காவற்துறையால் ஒரு பட்டியலும் வழங்கப்பட்டது.

இந்தசம்பவத்தில் உடனே இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் காவற்துறைத் தரப்பில் கூறப்பட்டது தப்பியோடியவரும் பின்னர் கைதுசெய்யப்பட்டு விட்டதான செய்தியும் வந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று கொழும்பில் வைத்து புதிய பகீர் செய்தி ஒன்றை சொன்னார்.

அதாவது இந்தசம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் முன்னர் பொட்டம்மானின் உளவுப்பிரிவில் பணியாற்றியவர் என சொல்லபட்ட விடயம் அல்ல அந்த பகீர்செய்தி. அதற்குப்பின்னர் சொன்னதுதான் அந்த பகீரிடும் செய்தி.

பொட்டம்மானின் உளவுப்பிரிவில் இருந்த இவர் உண்மையில் சிறிலங்கா இராணுவ உளவாளி எனவும் முன்னர் புலிகள் வைத்திருந்த தாக்குதல் திட்டங்களை அறிந்து கொள்வதற்காக இராணுவம் இவருக்கு அதிக பணத்தைவழங்கி உளவுத்தகவல்களை பெற்றதாகவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறான உளவாளிகள் இன்னமும் முன்னாள் போராளிகளிடையே கலந்திருப்பதால் அவசரப்பட்டு அவ்வாறான ஒருவரை கைது செய்தமை அரசியல் தலையீட்டுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு செய்யபட்ட ஒரு பெரிய துரோகம் எனவும், அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

அத்துடன் தற்போது விளக்கமறியலில் உள்ள இந்த உளவாளி வெளியேவந்ததும் புலிகளின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்படலாம் எனவும்,சரத் வீரசேகர கவலைகொண்டுள்ளார்.

ஆகமொத்தம் முன்னாள் போராளிகளை மாட்டிவைக்கும் சதிமுயற்சிகள் தொடர்வதை ஒட்டுசுட்டான் சம்பவத்தின் ஊடாக சிறிலங்கா தரப்பே இப்போது அம்பலப்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*