மனைவி செய்த துரோகம்… ஆபத்தான விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரைவிட்ட கணவர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மனைவி பிரிந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த தம்பதி அர்ஸன் வலேவ்-எக்டேரினா கேத்யா. இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

சுமார் 4,00,000 க்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமாக இருந்துள்ளது.

அர்ஸன் விலங்குகள் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார். அதில் உலகின் கொடிய விஷம் கொண்ட பிளாக் மாம்பா என்கிற பாம்பை வைத்துப் பல வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜுலை மாதம் திடீரென்று இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி எக்டேரினா கணவரை பிரிந்து சென்று தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி வேறு ஒருவருடன் வாழவும் ஆரம்பித்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் இருந்த அர்ஸன், மனைவி வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறார் என்று தெரிந்தவுடன் மிகவும் வேதனையடைந்துள்ளார்.

கடும் விரக்தியில் இருந்த அவர் திடீரென்று அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி தன்னுடைய யூடியூப் சேனலில், நேரலையில் தன்னுடைய பார்வையாளர்களிடம் பேச ஆரம்பிக்கிறார். பின்னர் கையில் ரத்தம் சொட்ட சொட்ட தனது மனைவி தான் மிகவும் நேசிப்பதாக கூறும் அவர், கடைசி நேரத்தில் அவளுடன் இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

அப்போதுதான் தெரிந்தது அவர் தன் வீட்டில் வைத்திருந்த கடும் விஷம் நிறைந்த உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றான பிளாக் மாம்போ பாம்பை தன்னுடைய கைகளில் கடிக்க வைத்துள்ளார் என்று. இதைக் கண்ட பார்வையாளர் ஒருவர் உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்நிலையில் கணவரின் மரணம் குறித்து தற்போது பேசியுள்ள அவரது மனைவி கேத்யா, தான் தனது கணவரை விவாகரத்து செய்ய வில்லை என்றும் பிரிந்துதான் வாழ்ந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது கணவரின் கடைசி வீடியோவை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*