ஊபர் நிறுவனத்தில் சாரதிப் பணியில் சேருவது எப்படி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெரும்பாலான நகரங்களில் ஊபர் நிறுவனத்தின் வாடகைக் கார்கள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். வேகம், நம்பகத்தன்மை, நியாயமான கட்டணம் ஆகியவற்றால் மக்களின் மதிப்பைப் பெற்ற நிறுவனமாக ஊபர் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தில் ஓட்டுநருக்கான பணி வாய்ப்பைப் பெறுவது எப்படி என்பதைப் பார்ப்போம். ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது எளிது. அதற்கு மூன்று முக்கியமான வழிமுறைகள் உள்ளன.

ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநராக மூன்று படிநிலைகள் :

1. முதலில் ஊபர் நிறுவனத்தின் இணைய தளத்திற்குள் நுழைந்து, தேவையான தகவல்களைப் பதிவு செய்து ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

2. ஊபர் நிறுவனத்திற்காகப் பணியாற்றும் வகையில் உங்களுடைய கார் தகுதியானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஊபர் நிறுவனத்திற்கு எவ்வகையான கார் தேவை என்பதை அறிந்து அதற்கேற்பத் தயார்படுத்தலாம். அல்லது, உங்களிடம் இருக்கும் காரை அருகில் உள்ள ஊபர் கிரீன்லைட் மையத்திற்கு (Uber Greenlight Location) ஓட்டிச் சென்றால், அங்குள்ள நிபுணர்கள் சோதித்துச் சான்று வழங்குவர்.

3. பொருத்தமான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் மற்றும் காப்பீடு செய்திருக்க வேண்டும்

ஊபர் நிறுவனத்திற்கு ஏற்ற வாகனம்.! நீங்கள் சொந்தமாகக் கார் வைத்திருந்தால் அது ஊபர் நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதிகளோடு இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கார் வாங்கி ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். 4 முதல் 8 நபர்கள் வரை அமரக்கூடிய வசதியுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்ற வகையில் கார் மாடல்களை ஊபர் நிறுவனம் தேர்ந்தெடுக்கிறது. இது பற்றிய விவரங்களை ஊபர் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.காரை ஊபர் நிறுவனத்தின் கிரீன்லைட் மையத்திற்கு எடுத்துச் சென்று, நிபுணர்களின் மூலமாகச் சோதித்துத் தகுதி நிலையை அறிந்து கொள்ளலாம்.

சொந்தமாகக் கார் இல்லாவிட்டால் கவலை வேண்டாம்.! உங்களிடம் சொந்தமாக கார் இல்லாவிட்டால் அல்லது ஊபர் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப உங்களுடைய கார் இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டாம். ஊபர் நிறுவனம் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது ஊபர் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாகனைத்தை வாடகைக்கு வாங்குவதற்கும் அல்லது சொந்தமாக வாங்குவதற்கும் ஊபர் நிறுவனம் தனியாக வாகனச் சந்தை மையம் (Uber Market Place) ஒன்றை வைத்துள்ளது. வாகனங்களை வாங்குவதற்காக ஊபர் நிறுவனம் ஓட்டுநர்களுக்குச் சிறப்புச் சலுகைகளையும், திட்டங்களையும் வழங்குகிறது.

எவ்வகையான ஓட்டுநர் உரிமம் தேவை? ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநர் ஆகவேண்டும் என்றால் பொருத்தமான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாடுகளுக்கும் தகுந்தாற் போல ஓட்டுநர் உரிமம் மாறுபடும். இங்கிலாந்தாக இருந்தால் தனியார் வாடகை வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (Private Hire Vehicle licence (PHV)). அமெரிக்காவில் 21 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்றாண்டுகள் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். எவ்விதமான விபத்துகளும் ஏற்படுத்தியிருக்கக் கூடாது. போதைப் பொருள் உபயோகித்தல், குற்ற வழக்குப் பின்னணி, கவனமின்றி வாகனத்தை ஓட்டுதல், உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டுதல் போன்ற புகார்களுக்கு உள்ளாகியிருக்கக் கூடாது. அமெரிக்க அரசு வழங்கிய சமூகப் பாதுகாப்பு எண் (Social Security number) வைத்திருக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் விண்ணப்பிக்கும் ஓட்டுநர்களின் பின்ணனியை ஆராய்ந்து பார்த்த பிறகு ஊபர் நிறுவனம் தன்னுடைய முடிவை அறிவிக்கும். இந்தியாவில் ஊபர் ஓட்டுநராக வேண்டும் என்றால் அதற்குரிய தனியான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஊபர் ஓட்டுநராகத் தேவையான காப்பீட்டுத் திட்டம்.! ஊபர் ஓட்டுநராக வேண்டும் என்றால் உரிய வகையில் காப்பீடு செய்திருக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் காப்பீடு செய்திருந்தாலும் சொந்த உபயோகத்திற்கு மட்டும் அல்லாமல் உங்களுடைய வாகனத்தை வாடகை மற்றும் பிற பணிகளுக்குப் பயன்படுத்தினாலும் காப்பீடு பெறும் வகையில் உங்களுடைய காப்பீட்டுத் திட்டம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஊபர் நிறுவன ஓட்டுநருக்கான பயிற்சி.! மேற்கண்டவை எல்லாம் சரியாக இருந்தால், இறுதியாக நீங்கள் ஊபர் நிறுவனம் அளிக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெறும் இப்பயிற்சி வகுப்பை ‘Ignition info session’ என அழைக்கின்றனர். பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு தீர்ப்பது போன்றவை குறித்து இங்கு பயிற்சி அளிக்கப்படும்.

வாடிக்கையாளர்களின் அழைப்பு, தூரம் மற்றும் கட்டணத்தைக் கணக்கிடல் ஆகியவற்றுக்காக ஊபர் பார்ட்னர் செயலியை (Uber Partner app) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும். வாடகைக்கு அழைக்கும் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தை அறியவும் இந்தச் செயலி உதவும்.

ஊதியம் மற்றும் கட்டணங்களைக் கணக்கிடல்.! ஊபர் நிறுவனத்தில் ஓட்டுநராக பணி நியமனம் பெற்றவுடன் உங்களுடைய வங்கிக் கணக்கு தொடா்பான தகவல்கள் பெறப்படும். உங்களுடைய பணிக்கான ஊதியம் உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பொதுவாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று ஊதியம் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 4 மணிமுதல் அடுத்த திங்கட்கிழமை காலை 3.59 மணிவரையிலான நாட்களில் ஓட்டுநர் வசூலித்த வாடகைத் தொகையை ஊபர் நிறுவனம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

மாறுபடும் கட்டணங்கள்.! பயணிக்கும் தூரத்தைப் பொறுத்தும், பயண நேரத்தைப் பொறுத்தும் வாடகைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பயணத்தின் பொழுது செலுத்தப்படும் சுங்கச் சாவடிக் கட்டணங்களை ஊபர் நிறுவனம் ஓட்டுநர்களுக்குத் திரும்பச் செலுத்திவிடும். பணியாற்றும் நகரத்தைப் பொ றுத்து, பயணக் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையும், புக்கிங் கட்டணத்தையும் ஊபர் நிறுவனம் எடுத்துக் கொள்ளும். ஓட்டுநர்கள் வருமான வரி செலுத்த வேண்டியிருப்பின், தாங்கள் வசிக்கும் நாடுகளின் வருமானவரிச் சட்டத்திற்கு ஏற்ப அவற்றைச் செலுத்திவிட வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*