இவளின் கொடூர மரணம் நமக்கெல்லாம் ஒரு நல்ல பாடம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 5 மணியளவில் தனது வீட்டின் தரையில் 17 வயதான லூசியா அவரது வீட்டின் தரையில் உயிரற்ற நிலையில், அவரது உறவினர் ஒருவரால் காணப்பட்டுள்ளார். பிரேசிலில் உள்ள ரியாச்சோ பிஃரியோ நகரில் வசிக்கும் லூசியா பினஹெரியோவை மருத்துவமனைக்கு “மிக விரைவாக” கொண்டு சென்றும் கூட, அவளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அவருக்கு என்ன நேர்ந்தது.? அவர் எப்படி இறந்தார்.? என்பதை அறிந்தபின்னர் ஸ்மார்ட்போனின் மீதான அச்சமும், முக்கியமாக ஹெட்செட் மீதான மரண பயம் தொற்றிகொள்கிறது என்றே கூறவேண்டும்.

ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் ஏற்றும்போது அதை பயன்படுத்துவதே தவறு என்று பரிந்துரைக்கும் நிலைப்பாட்டில், தனது மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டே அதை பயன்படுத்தியது மட்டுமின்று அதனோடு இணைக்கப்பட்ட ஹெட்போனை காதுகளுக்குள் பொருத்தியிருந்த மாணவி ஒருவர், மிகவும் விபரீதமான முறையில் பலியாகியுள்ளார்.

அவர் மீது மின்சாரம் பாய்ந்தது மட்டுமின்றி காதுகளில் அணிந்திருந்த ஹெட்போன் உருகிய நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சார்ஜரில் செருகப்பட்டிருந்த அவரின் மொபைல் ஒரு “பெரிய அளவிலான மின்சாரம்” மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரின் பாட்டி அளித்த தகவலின்படி, அவர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடந்துள்ள போதும் அவரின் காதுகளில் ஹெட்ஃபோன்கள் அப்படியே இருந்துள்ளது.

இதிலிருந்து அவர் தனது செல்போனை சார்ஜ் செய்துகொண்டே பயன்படுத்தியதால் ஏற்பட்ட மின்சார தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட மொபைல் மற்றும் ஹெட்செட் உருக்குலைவு ஆகிய காரணங்களினால் மரணித்துல்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“மின் அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு தான், லூசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று மருத்துவ பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் மழை எதுவும் பெய்யவில்லை, ஆனால் மின்னல் வெட்டுகள் இருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மிகவும் ‘டிரெண்டான’ மற்றும் மிகவும் சிறிய கருவியான ஹெட்போன்கள் உங்கள் காதுகளுக்கு இசையை மட்டுமே வழங்குகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமைக்கு அடையாளம். எப்போதும் கைகளில் மொபைல்போன், காதுகளில் ஹெட்செட் என திரியும் நம்மில் பலருக்கு மொபைல்போன்களும், ஹெட்போன்களும் உடல் உறுப்புகளில் ஒன்றாகிவிட்டது என்றே சொல்லலாம்.

பிறரை தொந்தரவு செய்யாமல் இசை கேட்க வேண்டும் என்ற தேவைக்காக நம் காதுகளுக்குள் புகத்தொடங்கிய ஹெட்செட்கள் தற்போது சாலையோரம்- பேருந்து – ரயில் – ஸ்கூட்டார் பயணம் தொடங்கி உறங்கும் போது கூட நம் காதுகளுக்குள்ளேயே திணிக்கப்பட்டு கிடக்கின்றன என்பது தான் நிதர்சனம். இவ்வாறான அதிகப்படியான ஹெட்போன் பயன்பாடு நம் காதுகளுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் எளிய வழிமுறைகளை காண்போம்.

ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது. அது காதிரைச்சல், காது தொற்று மற்றும் காது கேளாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.

பெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும், அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறுகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

விசித்திரமான மற்றும் அதிகப்படியான சத்தமானது காதுகளில் ஒரு குறிப்பிட்ட கூர்மையான வலியை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஹெட்போன்களால் ஏற்படும் விபத்துகள். இந்த விளைவு பற்றிய விளக்கமே தேவையில்லை பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்பட பிரதான காரணமாய் இருப்பது ஹெட்போன்கள் தான்..!

மிகச்சிறிய ஹெட்போன்களை, அதாவது நேரடியாக காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிரிக்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.

உங்கள் காதுகளில் பிறர் காதுகளின் பாக்டீரியா நுழையாமல் இருக்க பிறரின் ஹெட்செட்களை பயன்படுத்துவதையும் உங்கள் ஹெட்செட்களை பிறருக்கு வழங்குவதையும் தவிர்த்திடுங்கள்.

முடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பான்ஜ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பான்ஜ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுங்கள்.

நடக்கும் போது, பிற வாகன பயணத்தின் போதும் ஹெட்செட்களை தவிர்த்திடுங்கள், இல்லையெனில் குறைந்த அளவிலான ஒலியை கையாளுங்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*