மிகப்பெரும் சோகத்தினை உண்டாக்கியுள்ள சம்பவம்!

பிறப்பு : - இறப்பு :

38 வயதுடைய இலங்கையர் ஒருவரும் அவரின் 4 மற்றும் 6 வயது புதல்வர்களும் தமிழகத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை மதுரவோயல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அவர்கள் நேற்றைய தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது
ஹபீப் ரஹ்மான் என்ற குறித்த இலங்கையர், தமது இரு புதல்வர்களுக்கும் நஞ்சூட்டுவித்து தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், தற்கொலை செய்துகொண்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் காவல்துறையினரால் குறித்த வீட்டிலிருந்து மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை அவர்கள் தங்கியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து அயலவர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டினுள் சடலங்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து, காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சடலங்களை மீட்ட காவல்துறையினர், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit