கொழும்பில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இரத்மலானை – சாக்கிந்தாராம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 7.20 மணியளவில் குறித்த இராணுவ அதிகாரியின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டியிலும் வந்த இனந்தெரியாதோர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்துள்ள இராணுவ அதிகாரி, களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே காயமடைந்துள்ள நிலையில், அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*