விபச்சாரிகளின் கூடாரமாக மாறும் இலங்கை… 3 விடுதிகள் சுற்றிவளைப்பு… 17 பேர் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட மூன்று விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விபச்சார விடுதிகளை நடாத்திச் சென்ற மூன்று நபர்களும், விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 பெண்களும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை பிடியாணைக்கு அமைய ஹபரணை காவல்துறையால் நேற்று இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

ஹபரணை – அநுராதபுரம் பிரதான வீதி மற்றும் பொலன்னறுவை வீதியிலும் இந்த விபச்சார விடுதிகள், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தி செல்லப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள், ஹபரணை, பொலன்னறுவை, மாத்தளை, ஹிங்குராக்கொட, புத்தளம் மற்றும் கல்நேவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இன்றைய தினம் கெக்கிராவ மற்றும் ஹிங்குராக்கொட நீதிமன்றங்களிலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*