இந்த விடயங்களை நீங்கள் செய்தால் கூகுள் உங்களுக்கு பணம் அளிக்கும்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கூகுள் என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், இணைய விளம்பரத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

இதனைப் பற்றிய நல்ல பயனுள்ள தகவல்களைக் காணும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய பல சலுகைகளை கூகுள் தற்போது மக்களுக்கு வழங்குகிறது, மேலும் இந்த தகவல் உங்களுக்கு விளம்பரப்படுத்தப் பயன்படாது மாறாக, எல்லா பயனர்களுக்கும் உதவக்கூடிய வகையில் இருக்கும். மேலும் கூகுள் பயனர்களுக்கு பல்வேறு தரவுகளை கொடுக்க தயாராக உள்ளது. இப்போது கூகுள் மூலம் பணம் மற்றும் வெகுமதிகளை மிக எளிமையாக பெறமுடியும்.

கூகுள் ஒப்பீனியன் ரிவார்ட்ஸ்:

கூகுள் ஒப்பீனியன் ரிவார்ட்ஸ் இவை கடந்தவாரம் தொடங்கப்பட்டது, கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து இவற்றைப் பெறமுடியும். மேலும் இவற்றின் மூலம் புதிய ஆண்ட்ராய்டு விளையாட்டை கூட நீங்கள் எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் இவை பல்வேறு வெகுமதிகளை தருகிறது. கூகுள் ஒப்பீனியன் ரிவார்ட்ஸ் மக்களிடம் சில கேள்விகளைக் கேட்டு அதற்க்கு தகுந்த சிறப்பான பரிசுகளை அறிவிக்கிறது.

கூகுள் மேப்:

கூகிள் வரைபடத்தில் தகவல்களைப் பங்களிக்க உதவுகிறது, இவற்றில் கேள்விகளுக்கு பதிலளித்து, இடங்களைக் குறிப்பதற்கும், உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் மதிப்புரைகளையும் சேர்ப்பதன் மூலம் சில சிறப்பு பரிசுகள் மற்றும் வெகுமதிகள் கிடைக்கும்.

இவை அனைத்தும் மிகவும் புத்திசாலித்தனமாக செயலாற்றப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓலாவின் கார் சேவை வசதியைக் கூடப் பெறமுடியும், மேலும் கூகுளின் பல்வேறு கருத்துக்கனிப்பு கூட்டத்திற்க்கு உங்களுக்கு அழைப்பு வரலாம். அதன் பல்வேறு புதிய திட்ங்களை நீங்கள் கூட செயல்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

ஸ்கிரீன்வைஸ் மீடியா பேனல்:

விளம்பரங்களைப் பார்ப்பது அல்லது பயன்பாடுகளை நிறுவுதல் போன்ற விஷயங்களுக்கு ஸ்கிரீன்வைஸ் மீடியா பேனல் பயன்படுகிறது, இவற்றில் வெகுமதி ரொக்கமாகவோ அல்லது குறைந்தபட்சம் ஒரு உண்மையான கூப்பனை வழங்குகிறது ஸ்கிரீன்வைஸ் மீடியா பேனல்.

கூகுள் இன் சந்தை ஆராய்ச்சி திட்டம் ஸ்கிரீன்வைஸ் மீடியா பேனல். இவை இந்தியாவில் ஒரு வருடத்திறக்கு மேலாக இயங்கிவருகிறது, மேலும் இணையம் எவ்வாறு இணையத்தைப் பயன்படுத்துகிறது என்பதை ஆராய இவை உதவுகிறது. உங்கள் தொலைபேசியிலிருந்து இண்டர்நெட் அணுகும்போது, நீங்கள் பார்வையிடும் தளங்கள், நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கான சில அடிப்படை தகவல்கள் ஆகியவற்றை கூகுள் தெரிந்துகொள்ளும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*