கோடிக்கணக்கானவர்களின் வீடுகளை சூறையாடவுள்ள அன்டார்டிக்கா… 3 மடங்கு வேகத்தில் உருகுவதால் அதிர்ச்சி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அன்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக உருகிக்கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளின் மொத்த அடர்த்தியானது, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ ஆகியவற்றின் பரப்பளவுக்கு இணையானது. கடந்த காலத்தைப் போலவே அன்டார்டிகா பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் மொத்தமாக 58 மீட்டர் உயரும். கடந்த சில நாள்களுக்கு முன்னர் கடல்நீர் மட்டம் உயர்வதற்கு அன்டார்டிகாவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை 11 விதமான செயற்கைக்கோள்களின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அன்டார்டிகா

கடந்த 1992-ம் ஆண்டு முதல் 3 டிரில்லியன் டன் அளவு பனிப்பாறை உருகியுள்ளது. இதே அளவு பனிப்பாறைகள் உருகிக் கொண்டிருந்தால் கடற்கரையோர மக்களுக்கு நிச்சயமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். அன்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் வேகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. அன்டார்டிகாவில் உருகிய பனிப்பாறைகள் சிறியதாக இருந்தாலும், இதே நிலை நீடிக்கும்போது அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதன் பாதிப்பு இப்போது கண்முன்னர் தெரிய ஆரம்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த கடல்மட்ட உயரமே அதற்குச் சாட்சி. பனிப்பாறை உருகுவதற்குக் காலநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம். இதுபோன்ற பல தகவல்களை உலகம் முழுவதிலும் உள்ள 44 நிறுவனங்களைச் சேர்ந்த 84 துருவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அன்டார்டிகாவின் பரப்பளவு மிகப்பெரியது என்பதால், தொடர்ந்து செயற்கைக் கோள்களின் உதவியுடன் மட்டுமே கண்காணிக்க முடியும். அன்டார்டிகாவைக் கண்காணிக்கும் செயற்கைக் கோளை நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் இணைந்து கவனித்து வருகிறது. நாளுக்கு நாள் பனிப்பாறைகளின் உயரம், அடர்த்தியும் எடுத்துக்கொண்டு கண்காணிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டு 2,720 பில்லியன் டன் பனிப்பாறை உருகியிருந்தது. அதனால் 7.6 மி.மீ அளவு கடல் மட்டம் உயர்ந்திருந்தது. இப்போது ஆண்டுக்கு 0.6 மி.மீ என்ற அளவில் உயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 25 வருடங்களில் உயர்ந்த கடல் மட்டத்தை விட இப்போது கூடிவரும் அளவு அதிகம். மேற்குப் பக்கமாக உள்ள அன்டார்டிகா பனிப்பகுதி மட்டும்தான் அதிக அளவு உருகிக்கொண்டிருக்கிறது. 1992-ம் ஆண்டிலிருந்து வருடத்துக்கு 53 பில்லியன் டன் பனிப்பாறைகள் என்ற அளவில் உருகிக்கொண்டிருந்தன. 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக 159 பில்லியன் டன் பனிப்பாறை என்ற அளவில் உருகிக்கொண்டு வந்திருக்கிறது. இது 1992-ம் ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். இது உலக வெப்பமயமாதலின் விளைவுதான் என்பதே ஆராய்ச்சியாளர்களின் முக்கியமான கருத்து.

கடந்த 20 ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செயற்கைக்கோள் மூலம் அன்டார்டிகாவின் 24 இடங்களில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் மூலமாக 6 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் அளவுக்குப் பனி உருகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பனிப்பாறைகள் உருகத் தொழிற்சாலைகள் வெளியிடும் வெப்பத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதும் முக்கியமான காரணம். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த நூற்றாண்டின் முடிவில் அன்டார்டிகாவின் மொத்தப் பனியும் உருகும் வாய்ப்பு இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். அன்டார்டிகாவில் இருக்கின்ற மொத்தப் பனியும் உருகினால் கடல்மட்ட அளவு 210 அடிவரை உயரும். இந்தக்கடல் மட்ட உயரமானது பல கோடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும்.antarctica_001

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*