பாச மிகுதியால் ஆசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருந்த ஆசிரியரின் பணியிட மாற்றத்தை மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

இங்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர், இதே பள்ளியில் தான் ஆங்கில ஆசிரியராக பகவான் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் பணியிட மாறுதல் வந்துள்ளது. இதை அறிந்த மாணவர்கள், பெற்றோர்கள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.

அப்போது மாணவர்கள் ஆசிரியரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவின.

ஆசிரியரின் பணியிடை மாற்றத்தால், கடந்த இரண்டு தினங்களாக பள்ளியில் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை.

இதனால், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினர்.

போராட்டம் குறித்து விளக்கம் கேட்டதால், பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு விவரமும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஆசிரியர் பகவானின் இடமாறுதல் உத்தரவை நிறுத்தி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால், இன்று முதல் பள்ளி வழக்கம்போல செயல்படத் தொடங்கியுள்ளது.

மாணவர்களிடம் நட்பாக பேசி பழகி அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பகவானுக்கு சமூகவலைத்தளஙகளில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*