விபத்தில் இறந்த காதலனை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு கதறி அழுத காதலி! (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடவத்தை பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த காதலனின் சடலத்தை பார்வையிட்ட காதலி கதறி கண்ணீர் விடும் போது கூறிய வார்த்தைகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் முச்சகர வண்டி செல்வதற்கான பச்சை நிற வெளிச்சம் ஒளிர்ந்த வேளையில் முச்சக்கர வண்டி மெதுவாக நகர்கின்றது.

இந்நிலையில் எதிர்திசையிலிருந்து வேகமாக வருகை தந்த மகிழுர்தி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதுண்டமையினால் முச்சக்கர வண்டி சக்கரம் போன்று சுழன்று குடைசாய்ந்தது.

முச்சக்கரவண்டியில் காதலன் காதலனின் காதலி, காதலியின் தம்பி ஆகியோர் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரும் (சாரதி உட்பட) சிகிச்சை பெற்று வந்த நிலையில், காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றது.

காதலனின் சடலத்தை இறுதியாக காண்பிப்பதற்கு குறித்த யுவதி அழைத்து செல்லப்பட்டாள்.

தனது காதலனை சவப்பெட்டியில் பார்த்த காதலி கண்ணீர் விட்டு கதறி அழுது கூறிய வார்த்தைகள் மனதை நெகிழச் செய்கின்றன.

“என்னை இவரோடு செல்ல விடுங்கள், அல்லது இப்பொழுதே திருமணம் செய்து வையுங்கள். விவாக பதிவாளரை உடனடியாக அழைத்து வாருங்கள். நான் எனது காதலரை திருமணம் செய்ய வேண்டும்” என அனைவரிடமும் கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் தனது காதலனுக்கு எழுதிய கடிதமும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

‘ உங்களை பார்த்து மூன்று தினங்கள் கடந்த விட்டது. எனது அம்மா உள்ளிட்ட அனைவரும் உங்களை காண விரும்புகின்றனர்’ என கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதமே இணையத்தில் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*