புலிக்கொடி மற்றும் கிளைமோர் குண்டுகளுடன் ஒட்டு சுட்டானில் ஒருவர் கைது… இருவர் தப்பி ஓட்டம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ltte

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் விடுதலைப்புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (22) காலை 6 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போதே இவர்கள் குறித்த வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் இருந்து 20 கிலோ கிளைமோர் 1, கைக்குண்டு 1, றிமோட் கொன்ரோல் 4, T56 ரவுன்ஸ் 98, விடுதலைப் புலிகளின் சீருடை 2, விடுதலைப் புலிகளின் கொடி 40 – 45 என்வவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டுச்சுட்டான் பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இராணுவ புலனாய்வாளர்கள் என பலர் பொலிஸ் நிலையத்தில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தப்பியோடிய நபரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து காட்டில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit