வேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? டயட் இருக்கலாம் நினைக்கிறீங்க.. ஆனா ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல. அப்படித்தானே… வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சா அப்படியே அதுல ஏதாவது பக்க விளைவுகள் இருகு்கான்னும் யோசிக்க வேண்டியிருக்கு. இப்படி எக்கச்சக்க புலம்போடு எடையை குறைக்க வேண்டும் என்று தீவிர முடிவுடன் இருப்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு. எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத எடை குறைப்பிற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான ஒரு சிறந்த வழி ஆயுர்வேதம். ஆயுர்வேதம் மிகப் பழமையான மற்றும் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறையாகும்.

ஆயுர்வேதத்தை நீங்கள் பல விதங்களில் பயன்படுத்தி எடை குறைப்பை மேற்கொள்ளலாம். எடை குறைப்பை சிறந்த முறையில் செயல்படுத்தக்கூடிய சில மருந்துகள் கீழே உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஆயுர்வேத மருந்துகளைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் வேண்டாம். ஆயுர்வேத மருந்துகளால் எடை குறைப்பில் நல்ல பலனைத் தர முடியும் என்று முழுமையாக நம்புங்கள்… உண்மையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே ஆயுர்வேதம் எடை குறைப்பிற்கான தீர்வுகளை வழங்குகிறது. ஆயுர்வேத முறையில் எடை குறைப்பை மேற்கொள்வதன் மிக முக்கியமான நன்மை, இது ஒரு நிரந்தர தீர்வைத் தருவதாகும்.

மேலும் ஆயுர்வேத மருந்துகள், எந்த ஒரு நோய் பாதிப்பிற்கும் அடிப்படை காரணத்தை அறிய முற்படுகிறது. நோயாளியின் உடல் வகையை பொறுத்து அவருக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. உங்கள் பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணத்தைப் பெற முடியாது. உங்களுக்கான தீர்வுகள் மெதுவாக ஆனால் நிரந்தரமாக கிடைக்கும். அதுவரை பொறுமை அவசியம். உங்கள் ஆரோக்கியமும் இதன் மூலம் அதிகரிக்கிறது. ஆயுர்வேத முறையில் எடை குறைப்பை மேற்கொள்ள மருந்துகள் எடுத்துக் கொள்வது நிச்சயம் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் இதற்கான விதிகளை மீறாமல் நடக்க வேண்டும்.

தேன் மற்றும் எலுமிச்சை

இந்த முறையை நீங்கள் இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கலாம். எடை குறைப்பிற்கான பொதுவான முறையாக இது கருதப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து பருக வேண்டும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். தினமும் காலையில் பல் துலக்கியாவுடன் இதனை பருகலாம். உங்கள் பசியைக் குறைக்க இந்த பானம் உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்க உதவுகிறது. குளிர் நீரில் இந்த பானத்தை பருகுவதால் சளி பிடிக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே வெதுவெதுப்பான நீர் இதற்கு சிறந்த பலனைத் தரும்.

மிளகு

மேலே கூறிய தேன் மற்றும் எலுமிச்சை பானம் மிகச் சிறந்த தீர்வைத் தரும். இந்த பானத்தை பருகுவதால் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும். மேலும் இந்த பானத்துடன் சிறிதளவு மிளகு சேர்ப்பதால் இன்னும் பலன் அதிகரிக்கும். ஆனால் இந்த பானத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சரியல்ல. ஆகவே ஒரு நாளில் ஒரு முறை இதனை எடுத்துக் கொள்ளலாம். தேன் கலந்த எலுமிச்சை சாற்றுடன் மிளகு சேர்ப்பதால் சளி பிடிக்காமல் இருக்க உதவுகிறது.

முட்டைகோஸ்

பல எடை குறைப்பு தீர்வுகள் தராத ஒரு பலனை முட்டைகோஸ் தரும். இது ஒரு ஆரோக்கிய காய்கறி ஆகும். மேலும் பச்சை காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதனை எடுத்துக் கொள்வது நல்லது. முட்டைகோஸை வேக வைத்து சாப்பிடுவதும் அப்படியே பச்சையாக சாப்பிடுவதும் அவரவர் விருப்பம். ஆனால் பச்சையாக சாப்பிடுவதால் பலன் அதிகரிக்கும். தினமும் ஒரு கிண்ணம் முட்டைகோஸ் சாப்பிடுவதால் உங்கள் எடை வேகமாக குறையும்.

செரிமானத்திற்கு உதவுபவை

பல நேரங்களில் நீங்கள் சாப்பிடும் உணவால் உங்கள் எடை அதிகரிப்பதில்லை. நீங்கள் சாப்பிடும் உணவை உங்கள் உடலால் செரிமானம் செய்ய முடியாத நிலையில் இந்த எடை அதிகரிப்பு உண்டாகிறது. அஜீரணம், சில நேரங்களில் எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே செரிமானத்திற்கு உதவும் அல்லது செரிமானத்தை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும். இஞ்சி, பப்பாளி, பூண்டு, போன்ற உணவுகள் இந்த வகையை சேரும். இவை எடை குறைப்பதற்கும் பெருமளவில் உதவுகின்றன.

உங்கள் உணவு காரசாரமாக இருக்கட்டும்

சீரான செரிமானம் உடல் எடையை குறைக்க மிகவும் முக்கியம் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். தினமும் காரசாரமான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதை நிறுத்தும்போது, உங்கள் செரிமான நெருப்பு அணையக்கூடும். இதனால் மறுபடி உங்கள் எடை அதிகரிக்கும். ஆகவே உங்கள் தினசரி உணவில் காரம் சரியான அளவு எடுத்துக் கொள்வதால் சீரான வழியில் உங்கள் எடை குறையும். கடுகு, மிளகு, சீரகம் போன்றவற்றை உங்கள் உணவில் தினமும் எடுத்துக் கொள்வதால் நல்ல விளைவுகள் ஏற்படும். மிளகுக்கு மாற்றாக மிளகாயும் பயன்படுத்தலாம். மிளகு அசிடிட்டி உருவாக்கும் என்பது கட்டுக்கதை. இது உங்கள் வயிற்றை குளிர்ச்சியாக வைக்கும்.

அமாவை குறையுங்கள்

உங்கள் செரிமான மண்டலத்தால் முழுவதும் செரிக்க முடியாத உணவை ஆயுர்வேதத்தில் அமா என்று கூறுவார்கள். இந்த அமா உங்கள் உடலில் ஒன்றுசேர்ந்து தீங்கை விளைவிக்கும். இது உங்கள் நிணநீர் வழிகளை அடைக்கிறது. இதுவே உங்கள் எடை அதிகரிப்பை தூண்டும் முக்கிய காரணியாகும். எடையை குறைக்க இந்த அமாவை வெளியேற்றுவது மிக முக்கியமாகும். இந்த பணியைச் செய்ய மஞ்சள், திரிகடுகம்(இஞ்சி மற்றும் மிளகு கலவை), போன்றவை உதவும். இந்த பொருட்களை உங்கள் உணவில் எடுத்துக் கொள்வதால் உடலில் அடைந்திருக்கும் அமாவை வெளியேற்றலாம்.

விரதம்

விரதம் இருப்பது என்பது நீண்ட கால நம்பிக்கை மற்றும் விரதத்தைப் பற்றி ஆயுர்வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது . விரதம் இருப்பது மிகவும் அவசியம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. விரதம் என்பது ஒரு நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் முறையாகும். விரதம் இருப்பதால் உடல் ஆரோக்கியம் கெட்டு சோர்வு உண்டாவதாக பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. விரதம் என்பது மிகவும் அவசியம், மேலும், விரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வாரத்திற்கு ஒரு முறை விரதம் இருப்பது உடலுக்கு நன்மை தரும். உங்கள் உடலின் செரிமான மண்டலம் முழுவதும் உள்ள நச்சுகளை அகற்றி தூய்மை படுத்த இந்த விரதம் உதவுகிறது. விரதம் இருக்கும் நாட்களில் க்ரீன் டீ மற்றும் தண்ணீர் குடிப்பது நல்லது.

மருந்து கலவை

குட்கி என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் சரகோத்தினி, சிட்ரக் என்று அழைக்கப்படும் சித்திர மூலம் மற்றும் திரிகடுகம் ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்து ஒரு கலவை தயாரிக்க வேண்டும். இந்த கலவையுடன் நீர் சேர்த்து ஒரு திரவமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த திரவத்தை தினமும் ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறையும்.

மூலிகை

மூலிகைகள் பொதுவாக நமது அன்றாட வாழ்வில் பல நன்மைகளைத் தருகின்றன. எடையை குறைப்பதற்கும் இவை பெருமளவில் உதவுகின்றன. எடை குறைப்பிற்கு காரணமாக பல மூலிகைகள் உண்டு. அக்கம், கடுக்காய், நெல்லிக்காய், அதிமதுரம், துளசி, கற்றாழை, குடம்புளி போன்றவை இந்த மூலிகையாகும். இவை முற்றிலும் இயற்கையானவை மற்றும் சிறந்த தீர்வுகள் தருபவை. உங்கள் வசதிக்கேற்ப இவை மாத்திரை வடிவத்திலும் கிடைக்கிறது.

இஞ்சி

இஞ்சி ஒரு சிறந்த மருந்து என்று ஆயுர்வேதம் உரைக்கிறது. பல உடல் நலக் குறைவுகளை போக்குவதில் சிறப்பாக செயல்படும் இஞ்சி, எடை குறைப்பில் நல்ல பலனைக் கொடுக்கிறது. தினமும் காலை நேரத்தில் இஞ்சியை எடுத்துக் கொள்வதால் உஅல் குளிர்ச்சி அடைவதைத் தடுத்து வெப்பத்தைக் கொடுக்கிறது. உங்கள் உடலில் உள்ள அதிக கொழுப்பை எரிக்க இஞ்சி உதவுகிறது. தினமும் தொடர்ந்து பிரஷ் இஞ்சியை எடுத்துக் கொள்வதால் , சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*