உயிருக்கு ஆபத்து… துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரும் சாக்ஷி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தோனியின் மனைவி சாக்ஷி, துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்.

தோனி எந்த அளவிற்கு இந்தியா முழுக்க வைரலோ அதே அளவிற்கு அவரது மனைவி சாக்ஷியும், அவரது மகள் ஜிவாவும் வைரல். இருவரின் அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையம் முழுக்க இப்போதும் வைரல் விஷயங்களாக வலம் வந்து கொண்டுள்ளது.

பல்வேறு காரணங்களை கூறி அவர் துப்பாக்கிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அவர் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதம். அதற்கு ஏற்றபடி சில ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அணி வீரர்கள் சரியாக விளையாடாத போது பிரச்சனை செய்வது உண்டு. ஏற்கனவே சில முறை தோனியின் வீட்டில் அவரது ரசிகர்கள் கல்லால் தாக்கி இருக்கிறார்கள். சில முறை நேராக சென்று கட்டிபிடித்து காலில் விழுந்து அன்பை வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள்.

இதனால் தோனியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கு 2017ல் இருந்து போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தோனிக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒய் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தோனி தன்னுடைய பயன்பாட்டிற்காக துப்பாக்கி வைத்துள்ளார். தன்னுடைய பாதுகாப்பு கருதி அவர் துப்பாக்கி வைத்துள்ளார். இதற்காக அனுமதியும் பயிற்சியும் எடுத்துள்ளார். இவர் கடந்த 2010ல் இருந்தே துப்பாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவியும் துப்பாக்கிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார். அதில் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். தோனி விளையாட செல்லும் சமயங்களில் தனியாக பயணம் செய்யவும், வாழவும் வேண்டியுள்ளது. அதனால் பாதுகாப்பு வேண்டி துப்பாக்கி தேவைப்படுகிறது. இவரது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*