சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்தவர்களுக்கு கிடைத்த தண்டனை!

பிறப்பு : - இறப்பு :

இளவயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான வேலைகளுடன் 10 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

2002ம் ஆண்டு புத்தல பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் 37 மற்றும் 40 வயதுடைய இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் இருவரையும் குற்றவாளியாக அறிவித்து ​கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இன்று தீர்ப்பளித்தார்.

அதேவேளை 5000 ரூபா அபராதமும் ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

இது தவிர சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாமையால் அவரை நிபந்தனையற்று விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit