அடுத்தடுத்து மரணம்… வவுனியாவையே சோகத்தில் மூழ்கடித்த சகோதரிகள்!

பிறப்பு : - இறப்பு :

வவுனியாவை சோகத்துக்குள்ளாக்கிய இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்று முன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.

வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 22.05.2018 அன்று குறித்த சகோதரிகளில் 8 வயதான தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை அவரது சகோதரியான 7 வயதான சரனிக்கா எனும் சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சகோதரிகளின் மூத்த சகோதரனும் தனது ஏழு வயதில் இதே நோயினால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது

ஒரே குடும்பத்தில் தொடர்ந்து சிறார்களின் உயிரிழப்பு நடந்தமை வவுனியாவை அதிர வைத்ததுள்ளதுடன் முழு வவுனியா மக்களும் அந்து சிறுவர்களுக்கு உதவ முடியாத நிலையை நினைத்து சோகத்திற்குள்ளாக்கியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit