காதலின் வகைகளும், காதல் நோய்களும் அவற்றுக்கான மனநல ஆலோசனைகளும்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்படப் பாடல்கள் வரை எல்லாக் காலங்களிலும் கொண்டாடப்பட்டுவருவது காதல். காதலுக்கான வரையறைகள் எண்ணிலடங்காதவை. இதில் பல வகைகள் இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் கடக்கவேண்டிய ஒன்று காதல் என்பதை மறுப்பதற்கில்லை. அந்தவகையில் காதலின் வகைகள், அது தொடர்பான நோய்கள் மற்றும் காதலர்களுக்கான சில மனநல ஆலோசனைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

காதல் என்றதும் நம் நினைவுக்கு வரும் ஒற்றை வார்த்தை, லவ் (Love) எனும் ஆங்கிலச் சொல்லாகத்தான் இருக்க முடியும். ஆனால் கிரேக்க நாகரிகம், மனிதன் பிறர் மீது செலுத்தும் அன்பை அடிப்படையாகக்கொண்டு அகேப் (Agape), பிலியோ (Phileo), ஸ்டோர்ஜ் (Storge), ஈரோஸ் (Eros) எனக் காதலைப் பிரிக்கிறது.

`அகாப்’ வகை மனிதர்கள் நிபந்தனையற்ற அன்பைச் செலுத்துபவர்களாக இருப்பார்கள். `பிலியோ’ பிரிவினர் நட்புணர்வுகொண்டவர்கள். `ஸ்டோர்ஜ்’ வகையினர் பாசம் மிகுந்தவர்கள். `ஈரோஸ்’ வகையைச் சார்ந்தவர்கள் காதலில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள். சரி. காதலின் வகைகளை பார்த்தோம். இப்போது காதல் நோய்கள் பற்றி பார்க்கலாம்.

எரோட்டோமேனியா (Erotomania)

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னைவிட உயர்ந்த ஆளுமைகள் தன்னைக் காதலிப்பதாக உறுதியாக நம்புவார்கள். உதாரணமாக, திரைப்பட நட்சத்திரம் ஒருவர் தன்னை உறுதியாக காதலிப்பதாக நம்புகிறவர்களை நாம் பார்த்திருப்போம். அவர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களே. இவர்கள் தீவிரமான மனப்பிறழ்வுக்கு ஆளானவர்களாக இருப்பார்கள்.

பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் (Borderline Personality)

இவர்கள், அன்புக்காக ஏங்குபவர்களாக இருப்பார்கள்; அனைவருடனும் எளிதில் பழகி விடுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் காதல், உடனே பூத்து உடனே முறியக்கூடியடியதாக இருக்கும். தங்கள் துணை பிறருடன் அதிக நேரம் செலவழிப்பதைக்கூட விரும்ப மாட்டார்கள். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுத்துவிடுவார்கள். சரி காதலர்களுக்கான நோய்களைப் பார்த்தோம். இனி காதலர்களுக்கான சில ஆலோசனைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

காதலர்களுக்கான சில ஆலோசனைகள்…

மனித வாழ்க்கையில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான துணை தேடல்தான் ஒவ்வொரு மனிதனையும் காதலில் விழச்செய்கிறது. வாழ்க்கையின் ஒரு பகுதிதான் காதல். காதலில் தோல்வியடைந்தால், அதிலேயே தொய்ந்துபோய்விடாமல், உங்கள் வாழ்வின் குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள்.

ஈகோவுக்காகக் காதலிப்பதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் துணைக்கு உண்மையான காதலைக் கொடுங்கள். காதலன் அல்லது காதலி இருவரும் ஒருவரையொருவர் உடைமைகளாகப் பார்க்காதீர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

சமூக வலைதளங்களில் போலியான முகத்துடன் பழகுபவர்களிடம் இருந்து விலகிவிடுவது நல்லது. காதலிக்கும்போது பெரும்பாலும் அனைவரும் தங்கள் நல்ல பக்கங்களை மட்டுமே காண்பிப்பார்கள். திருமணத்துக்குப் பின்னர்தான் ஒப்பனை களைவதுபோல அவர்களின் நல்ல பக்கங்களும் களைந்து போகும். எனவே, வாழ்க்கைத் துணையைச் சரியாகத் தேர்ந்தெடுங்கள்.

காதல் தோல்வியடையும் பட்சத்தில், காலம்தான் சிறந்த மருந்து. காதல் தோல்வியில் தவறான பழக்க வழக்கங்களின் பக்கம் திசை திரும்ப வேண்டாம். உங்கள் காதலை நிராகரிப்பதற்கு நீங்கள் தேடும் துணைக்கு உரிமை உண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*