வெற்றி பெறுவதற்கு மேற்கிந்திய அணிக்கு 296 ஓட்டங்கள் தேவை!

பிறப்பு : - இறப்பு :

sl-vs-wi

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாளான இன்று இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் திக்வெல்ல 62 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய அணி சார்பாக பந்துவீச்சில் கெப்ரியல் 62 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் மேற்கிந்திய தீவுகள் அணி 5 ஆம் நாள் நிறைவிற்குள் 296 ஓட்டங்களை பெற வேண்டும்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit