முதல் நாள் அன்றே கல்லூரிக்கு ஆயுதங்களுடன் சென்ற மாணவர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தங்கள் ‘வேலை’யைக் காட்டிய மாணவர்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மாநகரப் பேருந்துகளில் ரகளை செய்த மாணவர்கள் 50 பேர் பிடிபட்டனர்.

இந்த ஆண்டுக்கான கல்வியாண்டில் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. முதல் நாள் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்படலாம் என்று போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்களிடையே பேருந்தில் யார் ஆதிக்கம் செலுத்துவது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தை ஒட்டி ‘பஸ்டே’ கொண்டாடுவதை போலீஸார் தடை செய்தனர். ஆனாலும் மாணவர்களிடையே எல்லைத் தகராறும் யார் பெரியவர் என்ற போட்டியினால் மோதலும் நடக்கிறது.

இந்நிலையில் போலீஸாரின் கண்காணிப்பில் இன்று பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட 50 மாணவர்கள் பிடிபட்டனர். இவர்களில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் 33 பேர், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் பிடிபட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரும் சிக்கியுள்ளனர்.

பிடிபட்ட 50 மாணவர்களிடம் கத்திகள், கோடாரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் மணிகண்டன் (21), மற்றொரு கல்லூரியின் முன்னாள் மாணவர் ஜெகன் (21) என்பவரும், ஐடிஐ மாணவர் ஒருவர் மற்றும் ஒரு சிறுவனும் சிக்கினர். இவர்களிடம் 10 பட்டாக்கத்திகள் கைப்பற்றப்பட்டன. அத்தனை கத்திகளும் சில நாட்களுக்கும் முன் செய்யப்பட்டவை. இவர்கள் இதை தயாரித்து கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்க கொண்டு வந்தார்களா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*