அனைவரையும் சிந்திக்க வைத்துள்ள கோர விபத்து! (வீடியோ இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

accident_

கந்தானை – பேரலந்த தொடரூந்து கடவையில் நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் உந்துருளியொன்று மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கடவை மூடியிருந்த நிலையில், உந்துருளியை தொடரூந்து கடவை வழியாக செலுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போதே உந்துருளி, தொடரூந்தில் மோதியுள்ள நிலையில், உந்துருளி செலுத்துனரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் படுகாயமடைந்து ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, களனி பகுதியை சேர்ந்த 41 மற்றும் 42 வயதான இரண்டு நபர்களே மரணமாகியுள்ளனர்.

இந்த விபத்து சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit