தந்தைக்கும் மகளுக்கும் நடந்த விபரீதம்… மட்டக்களப்பில் சம்பவம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, தன்னாமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி, தன்னாமுனை பிரதான வீதியால் பயணித்துக்கொண்டிருக்கும்போது, குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று பிரவேசித்துள்ளது.

மோட்டார் சைக்கிளுடன் மோதுப்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக முச்சக்கரவண்டியை வீதியின் மத்திக்குத் நகர்த்தியபோது எதிரே வந்த உழவு ,யந்திரமொன்றில் மோதுண்டு முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதியும் பின்னால் அமர்ந்திருந்த அவரது மகளும் படுகாயமடைந்து உதவிக்கு விரைந்தோரால் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்

விபத்தில் முச்சக்கரவண்டியும் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதி தலைமறைவாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*