தம்மின்த தேரர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியானது!

பிறப்பு : - இறப்பு :

கதிர்காமம் -கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மின்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரால் செய்துக்கொள்ளப்பட்ட 30 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தம்மின்த தேரர் சுடப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார்.

அதேபோல்,  சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 12ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது, காயமடைந்த கதிர்காமம் கிரிவேஹெர ரஜமஹா விகாராதிபதி கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit