பரீட்சை திகதிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது… கல்வி அமைச்சு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தபால்சேவை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இம்மாதம் நடைபெறவிருக்கும் பரீட்சைகளில் எவ்வித காலதாமதமுமின்றி, ஏற்கனவே அறிவித்த திகதிகளில் குறித்த பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தபாற்சேவை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் இம்மாதம் இடம்பெறவுள்ள பரீட்சைளுக்கான அனுமதிபத்திரங்கள் பரிட்சாத்திகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பரீட்சார்த்திகள் உரிய திகதிகளில் அனுமதிபத்திரங்களின்றி பரீட்சைகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி பரீட்சார்த்தி ஒருவருக்கு பரீட்சை அனுமதி பத்திரம் கிடைக்கபெறாது இருப்பின் அது தொடர்பான விபரங்களை 011 2785230, 011 277075 என்ற தொலைபேசி இலக்களினூடாகவும் அல்லது 011 2784232 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் மின்னஞ்சள் இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளவும் முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*