15 குழந்தைகள் பெற்றால் பெண்களுக்கு பரிசு… இது நம்ம இந்தியாவில் எங்கு தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடியை தாண்டி சென்று விட்டதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சில ஜாதி, இன அமைப்புகள் தங்கள் சமூகத்தினர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதும் ஆங்காங்கே நடக்கிறது.

இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு அமைப்பு தங்கள் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறது. மேலும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அந்த மாநிலத்தை சேர்ந்த யோங் மிசோ சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலேயே மக்கள் அடர்த்தி குறைவான மாநிலங்களில் 2-வது இடத்தை மிசோரம் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் அருணாசல பிரதேசம் இருக்கிறது.

மிசோரம் மாநிலத்தில் ஒரு சதுர கி.மீட்டர் பரப்பளவில் 52 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இந்தியாவில் தேசிய சராசரிப்படி சதுர கி.மீட்டருக்கு 382 பேர் வசிக்கின்றனர். மிசோராமில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக இருப்பதால் மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்வதாக யோங் மிசோ சங்கத்தின் தலைவர் வன்லால் ருதா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இது பற்றி அவர் கூறியதாவது:-

மிசோரம் மாநிலத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய அளவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் 2.35 சதவீதமாக இருந்தது. ஆனால், மிசோராமில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் 1.6 மட்டுமே இருந்தது.

பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை ஒப்பிடும் போது, நாங்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இங்கு மக்கள் தொகை அதிகரித்தால் இதன் மூலம் தொழில் வளரும். மிசோராமில் போதிய தொழிலாளர்கள் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடி பெருகிறார்கள். மாநிலத்திலேயே இதற்கு தேவையான மக்கள் இருந்தால் வெளிமாநில குடியேற்றங்கள் இங்கு வராது.

தற்போது வங்காள தேசத்தில் இருந்து அசாம் வழியாக ஏராளமானோர் குடியேறுகிறார்கள். அதே போல் மியான்மர் நாட்டில் இருந்தும் இங்கு சட்ட விரோதமாக குடியேறுகின்றனர்.

இந்த மாநிலத்தில் ஏராளமான நிலப்பரப்பு இருப்பதால் அவர்கள் இங்கு குடியேறி ஆக்கிரமித்து கொள்ளும் நிலை இருக்கிறது.

இந்த குடியேற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் எங்கள் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும். இதற்காகத்தான் எங்கள் பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*