இலங்கையர்களை மிக மோசமாக வர்ணித்த பிரபல விஞ்ஞானி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கையர்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புதிதாக வெளியிடப்பட்ட தனியார் பயண நாட்குறிப்புகளில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இனவெறி கருத்துக்கள் மற்றும் இலங்கையர்களுக்கு எதிரான இனவெறி வெளியாகி உள்ளன.

1922ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் 1923ஆம் ஆண்டு மார்ச் மாத காலப்பகுதியில் இந்த பயண நாட்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

இதில் ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் அவரது அனுபவங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

ஐன்ஸ்டீன், ஸ்பெயினிலிருந்து மத்திய கிழக்கிற்கும், இலங்கை வழியாக, பின்னர் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் சென்றுள்ளார்.

அப்போது இலங்கை, சிலோன் என அழைக்கப்பட்ட காலக்கட்டம். உள்ளூர் மக்கள் “நிலத்தடி மட்டத்தில் பெரும் இழிவான மற்றும் கணிசமான துர்நாற்றத்தில் வாழ்கின்றனர்,” “கொஞ்சமாக செய்யுங்கள், கொஞ்சமாகவே தேவைப்படும்.” வாழ்க்கையின் எளிமையான பொருளாதார சுழற்சி அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “The Travel Diaries”: Princeton University Pressஇனால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் ஸ்பெய்ன், சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பிலும் பல குறிப்புக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*