சங்காவும் விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்தார்!

பிறப்பு : - இறப்பு :

sangakkara

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் ஆலோசகராக இணையுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையை இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவும் நிராகரித்துள்ளார்.

இதனுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாமவும் ஏற்கனவே இந்த கோரிக்கையை நிராகரித்திருந்தனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக இணையுமாறு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹானாம, அரவிந்த டி சில்வா ஆகியோரிடம் விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அதில் நான்கு வீரர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit