பாடசாலை மாணவிகளை சீரழிக்க முயன்ற உப அதிபருக்கு நேர்ந்த கதி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

police-arrest

கலன்பிந்துனுவெவ பிரதேசத்தில் பல மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த உப அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு மாணவிகள் 3 பேரையும், 13 ஆம் ஆண்டு மாணவியொருவரையும் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த குறித்த உப அதிபர் முயற்சித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவிகள் பாடசாலைக்கு வரும் வேளைகளில் குறித்த நபர் இடைநடுவே நிறுத்தி அவர்களுடன் உரையாடுவது போன்று தனது மர்ம பகுதியை காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனுடன் பலமுறை தமது பிள்ளைகளை குறித்த உப அதிபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பெற்றோர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மிஹிந்தலை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit