புதிய மாற்றங்களுடன் பிக்பாஸ் வீடு! (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ்.

கடந்தவருடம் செம ஹிட் அடித்த இந்நிகழ்ச்சி மீண்டும் பெரிய எதிர்பார்ப்புடன் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.

இந்த வீட்டை பார்வையிட நமது சினிஉலகம் குழுவினருக்கு சிறப்பு அழைப்பு விடுத்தனர். வீட்டுக்கு சென்ற நம் பார்த்த சில காட்சிகள் உங்களுக்காக.

அனைவருக்கும் தெரிந்தது போல இது சென்னை புறநகரில் உள்ள EVP பிலிம்சிட்டியில் தான் செட் போட்டுள்ளனர். காலா படத்தின் தாராவி செட் கூட இன்னும் பிரிக்கப்படாமல் அருகில் தான் உள்ளது.

வீட்டுக்குள் செல்லவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது. வேலை செய்யும் பலரிடத்தில் Walkie Talkie கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்கு முன்னதாகவே உள்ள அலுவகத்திலேயே பல அறைகள் வரிசையாக உள்ளது. இங்கு தான் டாஸ்க், எவிக்சன், மேக்அப் என ஒவ்வொன்றுக்கும் தனி ரூம் உள்ளது. இதற்கு தனி ஆட்கள் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதுமே வீட்டின் முகப்பிலேயே Bigg Boss என்ற அந்த சுவர் கலரை மாற்றியுள்ளனர்.

வெளிப்பக்கம் Gardern ஏரியாவில் நாம் ஏற்கனவே பார்த்தது போலவே ஸ்விம்மிங்பூல், டிரெட் மில், அமர்ந்து பேச சோபா போன்றவை வைத்துள்ளனர்.

ஆனால் நாம் ஏற்கனவே நேற்று கூறியதை போல புதிதாக வெளியில் சிறை ஒன்றை அமைத்துள்ளனர். இதில் டாஸ்க் செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுமாம்.

உள்ளே நுழைந்ததும் முழுவதும் கலர்புல்லாக இருக்கிறது. ஆண்கள் அறை நீல வண்ணத்திலும், பெண்கள் அறை பிங்க் நிறத்திலும் உள்ளது.

நாமினேஷன்னா என்னங்காய்யா என்ற வசனத்தை பிரபலப்படுத்திய அந்த எவிக்ஷன் ரூம்க்கு சென்றோம். அங்கு அந்த பழைய நாற்காலி மாற்றப்பட்டு சிம்மாசனம் வடிவிலான நாற்காலி மாற்றப்பட்டுள்ளது. வெளியில் தனியாக இருந்த Smoking அறையை பாத்ரூமோடு இணைத்துள்ளனர்.

சின்ன வருத்தமாக அமைந்தது என்னவோ தொலைக்காட்சியில் பெரிதாக இருந்த வீடு பார்க்கும்பொழுது கொஞ்சம் சின்னதாக தான் இருந்தது. இதை அங்குள்ளவர்களிடம் கேட்டபொழுது கடந்தமுறையை விட இந்த முறை சில மாற்றம் செய்துள்ளோம். கொஞ்சம் சிறியதாகத்தான் அமைத்துள்ளோம் என்று கூறினார்கள்.

மற்றபடி வீடு இன்னும் 100 நாட்களுக்கு பல டாஸ்க்களையும், சந்தோஷங்களையும், சண்டைகளையும் பார்க்க கண்களாக பல கேமராக்கள் எங்கு திரும்பினாலும் நிறைந்து காணப்படுகிறது.

bigg_boss_001 bigg_boss_002 bigg_boss_003 bigg_boss_004 bigg_boss_005 bigg_boss_006 bigg_boss_007 bigg_boss_008

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*