வாக்கு கொடுத்து ஏமாற்றிய பிரதமர் மோடி… நினைவுபடுத்த 1350 கி.மீ நடந்த இளைஞன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Odisha

ஒடிசா மாநிலம் ரோர்கேலா பகுதியைச் சேர்ந்த முக்டிகாண்ட்(30) என்பவர் பிரதமர் மோடி கூறிய வாக்குறுதிகளை நினைவுக்கூற ஒடிசாவிருந்து டெல்லி வரை சாலை மார்க்கமாக கையில் தேசிய கொடியை ஏந்தி சுமார் 1350 கி.மீ நடந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிலை வடிவமைப்பாளரான முக்டிகாண்ட் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ”கடந்த 2015 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரோர்கேலா பகுதியில் அமைந்துள்ள இஷ்பாட் பொது மருத்துவமனை நவீன வசதிகளுடன் கூடிய மேம்பட்ட மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும், ப்ராஹ்மன் பாலத்தின் கட்டமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அவர் கூறி நான்கு ஆண்டுகள் ஆக போகிறது. இன்னும் எந்த வித பணிகளும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஒவ்வொரு நாளும் எங்கள் பகுதி மக்கள் துன்பப்படுகின்றனர்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத எங்கள் கிராமத்தின் நிலைமையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த பயணத்தை மேற்கொண்டேன். இந்திய கொடியின் மீதுள்ள ஆர்வத்தினால் அதை கையில் ஏந்தி நடைப்பயணத்தை மேற்கொண்டேன். மேலும் பிரதமர் கூறிய வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

இதனிடையே சுமார் 1350 கி.மீ நடந்து சென்ற முக்டிகாண்ட் ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் மயங்கி விழுந்ததால் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit