பூட்டானிய பெண்களை கடத்த முற்பட்ட இலங்கையர் கைது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arrest

மூன்று பூட்டானிய பெண்களுடன் இலங்கைக்கு வர முயற்சித்த இலங்கை முகவர் ஒருவரை மும்பையில் வைத்து புதன்கிழமை (13) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈராக்கில் உள்ள ஆண்கள் ஸ்பாவில் அதிக ஊதியத்திற்கு வேலை வழங்கித்தருவதாக உறுதியளித்து தங்களை அழைத்து வந்ததாக குறித்த பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்தப் பெண்களை அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் கொண்டு, குறித்த நபரின் ஆவணங்களை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் போலி இந்திய கடவுசீட்டுகளை பயன்படுத்தி, மூன்று பெண்களையும் கடத்த முயற்சி செய்ததுள்ளதாக சஹர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்கள் மூவரும் தொழிலை பெற்றுக்கொள்வதற்காக தலா 6000 இந்திய ரூபாக்களை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மூன்று பெண்களுக்கும் தேவையான வசதிகளை மும்பை பொலிஸார் வழங்கியுள்ளதுடன் இவர்கள் தொடர்பில் இந்தியாவிற்கான பூட்டான் தூதரகத்திடம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit