உலகப் புகழ் பெற்ற கார் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்ப் பெண்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

india

அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் நியமிக்கப்படவுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற செவர்லேட் மாடல் கார்களை தயாரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் தலைநகரான டெட்ராய்டில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கார்ப்பரேட் பைனான்ஸ் அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவரா, செப்டம்பர் 1-ஆம் திகதி ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பதவி ஏற்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பிறந்த திவ்யா, இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படிப்பை சென்னை பல்கலைகழகத்தில் முடித்தார்.

அதன் பின் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக சென்ற அவர் அங்கு பட்டய கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரா (56) என்ற பெண் இருந்து வருகிறார். மிகப் பெரிய நிறுவனத்தின் இரு தலைமை பொறுப்புகளிலும் பெண்கள் இருப்பது, ஆட்டோமொபைல் துறையில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 india

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit