பரிசோதனைக்காக சென்ற குழந்தையின் வயிற்றில் 8 மாதக் குழந்தை… அதிர்ச்சியில் பெற்றோர்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

medical_test

தங்காலையில் பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற மாணவி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் சுகயீனமடைந்த 13 வயதுடைய மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதிக்கும் போது அவர் தாய்மை அடைந்தமை தெரியவந்துள்ளது.

ரன்த பிரதேச பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்ற 13 வயதுடைய மாணவி பாடசாலையில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.

பின்னர் பாடசாலை ஆசிரியர்களினால் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவியின் சித்தி அவரை பாடசாலையில் இருந்து தங்காலை வைத்தியாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி 8 மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. மாணவி ஆபத்தான நிலையில் இருந்தமையினால் சத்திரசிகிச்சை மேற்கொண்டு குழந்தையும் மாணவியையும் வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகள் ஹுங்கம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த மாணவி தற்போது குனமடைந்து வருவதாகவும், குழந்தை மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் ரன்த காமோதர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் சிறுமியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit