விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் இல்லை… சுவிஸ் நீதிமன்றம் அதிரடி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ltte

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுவிஸின் பெலின்சோனா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கில் சுவிஸ் அரசு சார்பில், விடுதலைப் புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் விடுதலைப் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. அது பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும் நீதிமன்றம் கூறியது.

மேலும் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்தும் சுவிஸ் நீதிமன்றம் விடுவித்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit