தென்னாப்பிரிக்காவும் பேட்டிங்கில சொதப்பினாங்கதான…’ – தில் விராட் கோலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கேப்டவுன் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட்குறித்து தனது கருத்துகளைக் கூறினார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ்வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்ஸ்மேன்கள் சோபிக்காததால், இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள்கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*