இந்தியாவையே மிரளவைக்கும் தமிழக கிராமம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மிழகத்தில், இந்தியாவே மிரண்டுபோகும் அளவுக்கு ஒரு கிராமம் உள்ளது. திருச்சி அருகே உள்ள அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்மீது இந்தியா முழுவதும் 36 போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது.

திருச்சி அருகேயுள்ள ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள், குலத் தொழில் போல கொள்ளையடிக்கும் தொழிலைச் செய்கிறார்கள். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட இவர்கள், ‘கேப்மாரிஸ்’ என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இன மக்களுக்கு திருடுவதுதான் குலத் தொழில். சுதந்திரத்துக்கு முன், கரூர் அருகே தங்கிய இந்த மக்கள், அருகிலுள்ள கிராமங்களில் கைவரிசைகாட்டத் தொடங்கியிருக்கிறார்கள். திருட்டுத் தொல்லைத் தாங்காமல், கிராமத்தினர் இவர்களை விரட்டி அடித்துள்ளனர். அப்போதையை திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்த மக்களுக்கு  ராம்ஜி மில்லில் வேலை வாங்கிக்கொடுத்து தங்கவும் இடமளித்துள்ளார். அப்படித்தான் ராம்ஜி நகர் உருவானது.

மில்லில் வேலைக்குச் சேர்ந்தாலும், திருட்டுத் தொழிலை இவர்களால் விட்டுவிட முடியவில்லை. அந்தக் காலத்தில் பர்மா, மலேசியாவுக்கு வேலைக்குப் போவதுபோல, இவர்கள் கொள்ளைத் தொழிலில் அங்கெல்லாம் சென்று ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களின் செல்வச் செழிப்பைப் பார்த்து, மற்ற மக்களும் கொள்ளையர்களாக மாறிய வரலாறெல்லாம் உண்டு. இந்தியா முழுவதும் குழுக் குழுவாகச் சென்று கைவரிசை காட்டும் இவர்கள், திருடப்போவதற்கு முன், சொந்தக் கிராமத்தில் உள்ள கடவுளுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள். நல்லநாள் பார்த்துதான் திருடப் போவார்கள். திருடிவிட்டு வந்ததும், கன்னியாகுமரி சென்று கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, முக்கடலும் சங்கமிக்குமிடத்தில் கால்களைக் கழுவி, தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக, இதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*